Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டுப் பார்த்த பாஜக.. படக்கெனப் பேசிய எடப்பாடி! ஓபிஎஸ்&டிடிவிக்கு அதிமுக கூட்டணியில் நோ எண்ட்ரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டணியை பலமாக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக பேசியுள்ளது. விஜய் வருவது எட்டாக்கனியாக மாறியுள்ள நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனவும், தனி சின்னத்தில் கூட அவர்களை போட்டியிட வைக்கலாம் என பாஜக கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு கூட்டணியில் இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கட்சிக்குள்ளும், கூட்டணியிலும் நடக்கும் நிகழ்வுகள் அதற்கு சாதகமாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

edappadi palaniswami aiadmk bjp

அதிமுகவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மிக வலுவாக இருந்த தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேவர் சமூக செல்வாக்கு மிக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி

தற்போது கொங்கு மண்டலத்தில் மிக முக்கிய தலைவரும், அதிமுகவில் மிக மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். ஏற்கனவே தேவர் சமூகத்தினர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், செங்கோட்டையனை வெளியேற்றி இருப்பது கொங்கு மண்டலத்திலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி வருகின்றனர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்.

அதிமுக கூட்டணி

அதே நேரத்தில் கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்ட தங்கமணி, உள்ளிட்டோரும், எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் பகுதிகளில் சற்று செல்வாக்கோடு இருந்த நிலையில் அவர்களும் திமுகவுக்கு சென்றிருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பாஜக ஆலோசனை

பாஜக அதிமுக தவிர்த்து தற்போது அந்த கூட்டணியில் பெரிய அளவில் எந்த கட்சியும் இல்லை. தே.மு.தி.க, பாமக அதிமுக கூட்டணிக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் தென்பட்டாலும், பாமக மட்டுமே அதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால் தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதற்கிடையே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தங்கள் கூட்டணிக்கு வரும் என எடப்பாடி பழனிச்சாமி பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதால், அவர் அதிமுக கூட்டணிக்கு வருவது சாத்தியம் இல்லை என்று சொல்கின்றனர்.

ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன்

இந்த நிலையில் விஜய் கூட்டணிக்கு வராததால் 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மங்கி இருக்கிறது. இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதுதான். ஆனால் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை கூட்டணிலும் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அதிமுகவில் சேர்க்காவிட்டாலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அவர்களை தனி சின்னத்தில் கூட போட்டியிட வைக்கலாம் என பாஜக எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அதிமுக பாஜக பிரச்சனை

ஆனால், அவர்களுக்கு கட்சியிலும் இடமில்லை கூட்டணியிலும் இடம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை பாஜகவில் சேர வைக்கலாமா என மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என திட்டமிட்டிருந்த டிடிவி தினகரன் அது தொடர்பான சிக்னல் கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியாக அதிமுகவிலும் அதிமுக கூட்டணியில் நடக்கும் சில நிகழ்வுகளும் திமுக கூட்டணிக்கு சாதகமான வாய்ப்புகளையே உருவாக்கி வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+