கதிகலங்கிப் போச்சு கரூர்.. செந்தில் பாலாஜியின் பணபல அரசியல்! நீதியை புதைக்க முடியாது.. பாய்ந்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு சட்டவிரோதமானது. அவரின் கட்டுக்கடங்காத, மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல, தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை திராவிட மாடல் அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என பாஜக கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய இந்த படு பயங்கரமான 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், 6 கோடி தமிழக மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், சிபிஐ விசாரணையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

கரூரில் 41 பேர் உயிர் பலியான கோர சம்பவத்தின் வலி, வேதனை குறித்து அறியாமல், சட்டத்தை வளைக்கும் வகையில், எதுவுமே நடக்காதது போல், நடந்து சம்பவத்தை திசை திருப்பும் முயலும் அரசியல்வாதியின் சுயநல, பண பல, கிரிமினல் அரசியலையும், தமிழக மக்களுக்கு திமுக செய்து வரும் துரோகத்தையும் பாஜக வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.

BJP Urges Immediate CBI

இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த கொடிய சம்பவத்தின் உண்மைகளை குழி தோண்டி புதைத்து, தமிழக மக்களின் உயிரோடு விளையாடிய மக்கள் விரோத அரசியலுக்கும், திமுகவின் வழக்கமான, மரண வியாபார அரசியலுக்கும் தமிழக மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கரூர் உயிரிழப்பின் பின்னணியில் எவ்வளவு பெரிய அரசியல் சக்தி இருந்தாலும் , பாஜக சமரசம் இல்லாமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை சட்டப்படி தண்டிக்கும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வழிகாட்டுதலில் தமிழக மந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழு விரைவில் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலில் தமிழக அரசின் தமிழக காவல்துறையின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த நீதி விசாரணை நடக்கும். மேலும் 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த தமிழக வெற்றிக் கழகத்தின் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து உண்மைகளை வெளிக்கொணரவும், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் சிபிஐ விசாரணை அமையும் வரை பாஜக போராடும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய், குறித்த நேரத்திற்கு வராததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு விஜய் வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது மற்றும் விஜய் மீது செருப்பு வீசியது ஏன்? என்பதற்கு புது விளக்கமும், போலீஸ் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காதது தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்று செந்தில் பாலாஜி புதுவிதமான தீர்ப்பு எழுதி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது

ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டது ஏன்? கூட்ட நெரிசல் அதிகமாகும் போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து தமிழக வெற்றி கழகத்தினர் விழுந்ததால் தான் விபத்து ஏற்பட்டது. காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டில் கொடுக்காதது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, திமுக அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தன் கடமையை சரியாக செய்தது.

ஆனால் தமிழக வெற்றி கழகம் தனது கடமையை சரிவர செய்யாததால் தான் விபத்து ஏற்பட்டது என்று புதுப்புது வடிவங்களில் பல்வேறு அர்த்தங்களில், உண்மையை மறைக்கும் வகையில் அவராகவே உருவாக்கிய கேள்வி பதில் வடிவமான பல்வேறு கற்பனைக் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அளித்த கிரிமினல் விளக்கத்தையும் எதிர்காலத்தில் சிபிஐ விசாரணையில் சொல்ல வேண்டும். தற்பொழுது நடந்த சம்பவத்தை திசை திருப்பும் விதமாக, அவசர அவசரமாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனின் தலைவர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் மனசாட்சி போல, காவல்துறைக்கும் விசாரணை அமைப்புக்கும் வழிகாட்டுதல் வழங்குவது போல, உண்மைகளை மறைத்து, தவறாக சித்தரித்து பொய் பேசுவது ஆபத்தானது.

செந்தில் பாலாஜி தன்னுடைய உச்சபட்ச நாடக அமாவாசை அரசியலை, திமுக அரசின் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், கரூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது மூலம் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது. தமிழக மக்கள் உண்மைகளை புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் , காவல்துறையும் ஒரு பக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி பயங்கரமான பதட்டத்துடன், பொய்யான கருத்துக்களை நடந்த சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து திசை திருப்பும் வகையில், தமிழக வெற்றி கழகம் கூறியது எல்லாம் வதந்தி என்று அவசர அவசரமாக கூற வேண்டிய அவசியம் என்ன?

கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை தடுக்க முயல்வது ஏன்? கரூர், வேலுசாமிபுரம் வந்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடமை உணர்வுடன் மக்களுக்கு பணியாற்ற வந்த கண்ணியமிக்க பாஜக எம்பிக்கள் குழுவை மணிப்பூருக்கு சென்றார்களா? என்று மணிப்பூர் சம்பவத்திற்கும் கரூர் சம்பவத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மணிப்பூரின் அரசியல் வரலாறு தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இகழ்ந்து பேசியது மன்னிக்க முடியாது. கரூரில் நீதியை நாட்ட முயலும் அரசியல் சதியை ஆராய முயலும் பாஜக எம்பிக்கள் குழுவை தடுக்கும் விதத்தில், அவமதித்த செந்தில் பாலாஜி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 66 பேர் பலியான போது, தமிழக முதல்வர் கருணையுடன் பாதிக்கப்பட்ட "கருணாபுரம்" சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்த பொழுது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது,
உடனடியாக முதல்வர் நேரில் செல்ல வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்தும் அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி தேர்தல் பேரங்களுக்கு மட்டும், அரசியல் சுயலாபத்துக்காக டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் இரவோடு இரவாக, இருளோடு இருளாக கரூர், வேலுசாமிபுரத்திற்கு ஓடோடி வந்ததன் பின்னணி குறித்து செந்தில் பாலாஜி ஏன் பேசவில்லை? தன்னை உயிரினும் மேலாக காக்கும் முதல்வரை, காட்டிக் கொடுக்க மறுப்பது நியாயம் தானே?

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக டாஸ்மார்க் கடைகளில் மது பிரியர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது என்கிற பாஜகவின் தொடர் குற்றச்சாட்டு மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறிய பத்து ரூபாய் பாலாஜி, நடிகர் விஜய் பாடிய பத்து ரூபாய் பாட்டு ஆகியவை உண்மை என்பதை தெளிவாக விளக்கும் வகையில்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் போதிய விளக்கத்துடன் தமிழக மக்களுக்கு, மது பிரியர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்?

மிக முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் நன்கு அறிந்த ஊழலின் பிறப்பிடமான, இந்த அரசியல்வாதியின் பேச்சை நம்பாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு, தாயுள்ளத்துடன், அரசியல் நாகரீகத்துடன் முன்மாதிரி முதல்வராக சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+