அதென்ன 2 தலையாட்டி பொம்மைகள்.. தட்டில் வைத்து அமித்ஷாவுக்கு வானதி தந்த.. சர்ப்பிரைஸ்!
அமித்ஷாவுக்கு வானதி சீனிவாசன் பரிசு தந்தார்
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பரிசாக அளித்துள்ளார்.
நேற்று அமித்ஷா புதுச்சேரி சென்றிருந்தார் இல்லையா.. அப்போது அவரது எளிமையை கண்டு மக்கள் பூரித்து போய்விட்டனர்.

பரபரப்பான ரோட்டில், அங்கிருந்த ஒரு கடையில் காபி சாப்பிட்டுள்ளார்.. விழுப்புரத்தில் மீட்டிங் முடித்துவிட்டு, திரும்பி வரும்போது ஆன் தி வே-யில் ஒரு இயற்கை உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டார்.. அவருடன்தான் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
அமித்ஷா ஒரு டேபிளில் உட்கார்ந்திருக்க, அவருடன் முருகன் போன்றோரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள்.. அதற்கு பின்னால் வேறொரு டேபிளில் வானதி சீனிவாசன் நிர்வாகிகளுடன் சாப்பிடுகிறார்.. இறுதியில், அங்கிருந்த இயற்கை உற்பத்தி பொருட்கள் விற்பனையகத்தை அமித்ஷா பார்வையிட்டார்..
அப்போது, வானதி சீனிவாசன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அமித்ஷாவுக்கு பரிசாக அளித்தார். ஒரு தட்டில் வைத்து அந்த பரிசை தந்தார்.. இந்த தலையாட்டி பொம்மைகளை பற்றி ஏற்கனவே பிரதமர் மோடி, தன்னுடைய மன்கிபாத் நிகழ்ச்சியில் ஒருமுறை பேசியிருந்தார்.. கைவினைப் பொருட்களின் ஊக்கம், மதிப்பு குறித்து அவர் பெருமைபட பேசியிருந்த நிலையில், தற்போது இதே தலையாட்டி பொம்யை
வானதி சீனிவாசன் அமித்ஷாவுக்கு பரிசாக தந்துள்ளார்..
அந்த 2 தலையாட்டி பொம்மைகளை தந்தார்.. இதற்கான அத்தனை படங்களையும் வானதி தன்னுடைய ட்வீட்டரில் ஷேர் செய்துள்ளார்.. இதை பார்த்த ட்விட்டர்வாசிகள், "மேடம், பெரியார் படத்தை அவருக்கு பரிசாக தந்திருக்கலாமே என்றும், அது என்ன 2 தலையாட்டி பொம்மைகளை தந்தீர்கள்? என்றும் டபுள் மீனிங்கில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications