முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு - குஷ்பு ட்வீட்
முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு. வேல்யாத்திரை இன்றைய தினம் திருச்செந்தூரில் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
சென்னை: முருகனுக்கு அரோகரா என்று வேல் யாத்திரை வெற்றிக்காக பதிவிட்டுள்ளார் குஷ்பு. வெற்றிவேல் யாத்திரையின் நிறைவு விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நிறைவடைகிறது. எல். முருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. என்றாலும் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

அறுபடை வீடுகளுக்கு செல்ல இருந்த வேல் யாத்திரையை மழை தடை செய்தது. நிவர் புயர், புரேவி புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேல் யாத்திரையை சில தினங்களுக்கு மீண்டும் தொடங்கியது.

சஷ்டி திதியை மையமாக வைத்து பாஜக வேல் யாத்திரை தொடங்கியது. நவம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதி. டிசம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதியாகும். நேற்று முருகன் ஆலயங்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குக்கும் வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

திருச்செந்தூர் வேல் யாத்திரையில் நடிகை குஷ்பு பங்கேற்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Will be participating in #VelYaatrai today in #thiruchendhur. #MuruganakkuHaroHara #VeeraVelVetriVel pic.twitter.com/jLh2ObW72p
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 7, 2020
வேல் யாத்திரையில் பங்கேற்கிறேன். வீரவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.
#MuruganakkuHaroHara #VelYaatrai pic.twitter.com/P7FDKpovBI
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 7, 2020
வேல் யாத்திரையின் நிறைவு விழாவிற்கு கிளம்பிய பின்னர் அதனையும் பதிவிட்டு வெற்றி வேல் யாத்திரை முருகனுக்கு அரோகரா என்றும் பதிவிட்டுள்ளார்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications