Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை மாற்றப்படுவாரா? அப்படியானால் யார் தலைவர்? அவரா? இவரா? போட்டுடைத்த நாராயணன் திருப்பதி.. பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடங்களில் செய்திகள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்த தலைவர் யார் என்பது குறித்தான கேள்விகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த பாஜக தலைவர் யார் என்பதை பாஜக தலைமையே முடிவு செய்யுமெனவும், மற்றவர்கள் கவலைப் பட தேவையில்லை என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் சில பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Narayanan Tirupati BJP Annamalai

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது.. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் தலைமைக்கு சென்ற நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சில கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் செல்ல இருக்கிறார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் குறித்து பயில செல்லும் 12 பேரில் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதன் காரணமாக அவர் ஆறு மாதம் லண்டன் செல்ல இருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருக்கும் போது கட்சி பணிகளை கவனிக்க புதிய தலைவரை நியமனம் செய்ய மத்திய தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தலைவராக இருந்த ஒரு மூத்த தலைவர் மீண்டும் தலைவராக நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.


மேலும் சில தலைவர்கள் டெல்லியில் பதவியைப் பெற முயற்சித்து முகாமிட்டுருப்பதாகவும் தகவல் உலாவுகிறது. இந்நிலையில் அடுத்த பாஜக தலைவர் யார் என்பது குறித்து பாஜக தலைமையே முடிவு செய்யும் எனவும், மற்றவர்கள் மக்கள் நல காரியங்களில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” அண்ணாமலை மாற்றப்படுவாரா? அப்படியானால் யார் தலைவர்? அவரா? இவரா? என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர் பாஜக அல்லாத மற்ற கட்சியினர்.

அண்ணாமலையை சுற்றியே இவர்களின் சிந்தனை இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இது குறித்து சிந்திக்க வேண்டியது பாஜகவினர் தானேயன்றி மற்ற கட்சியினர் அல்ல. தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி குறித்து எந்த அளவிற்கு மிரண்டு போயுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது இந்நிலை. குறிப்பாக அண்ணாமலை அவர்களை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. தி மு க ,காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை போல குடும்ப கட்சியோ அல்லது ஒரு நபர் சார்ந்த கட்சியோ அல்ல பாஜக. திறமைக்கும், திறன் மிகுந்தவர்களுக்கும் பஞ்சமே இல்லாத கட்சி பாஜக.

Narayanan Tirupati BJP Annamalai

பொழுது போகவில்லையென்றால் சொந்த கட்சி கோஷ்டி பூசலை தீர்க்க முயற்சி செய்யட்டும்; அதைவிடுத்து, பாஜக விவகாரங்களில் தலையிட்டு மூக்கறுபட்டு ஏன் நிற்க வேண்டும்? யார் தலைவராக இருக்க வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? எப்போது மாற்ற வேண்டும்? எங்கு மாற்ற வேண்டும்? எப்படி மாற்ற வேண்டும்? மாற்ற வேண்டுமா, இல்லையா? என்பதையெல்லாம் பாஜக தலைமை முடிவு செய்யும். அதுவரை இந்த ரீல் சுத்துற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நல விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் சில ஊடகங்கள்.” என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+