என்ன பாஜக வளர்ந்திருக்கா? இல்லவே இல்லை.. டேட்டாவை எடுத்து வைத்து அதிர விட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது என சொல்கிறார்கள். இல்லை, தெளிவாக சொல்கிறேன்." எனக் கூறி புள்ளி விவரத்தை எடுத்து வைத்துள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கான வியூகங்கள் குறித்தும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பேச்சு: பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான். மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்த திமுக 26.5% வாக்குகளையே பெற்றது.
500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக தான். 2021 தேர்தலில் வெறும் 1.98 லட்சம் வாக்குகளால் தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஒன்றும் திமுக வெற்றி பெறவில்லை.
பாஜக வாக்கு சதவீதம் உயரவில்லை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கூடியதாக சில இடங்களில் சொல்கிறார்கள். இல்லை, தெளிவாகச் சொல்கிறேன். 2014-ஐ ஒப்பிடும் போது வாக்கு சதவீதம் குறைந்து தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 2024ல் 18.28% வாக்குகளை பெற்று அரை சதம் குறைவாக ஓட்டுகளைத்தான் வாங்கியுள்ளது.
குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது அதிமுக: 2014 ஆம் ஆண்டு 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%. 2024ல் அக்கட்சி 13.15% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் பாஜக 1.91% குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியைவிட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. " எனக் கூறினார்.
234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்: மேலும், "தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்வேன். அதேபோல், மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி நிச்சயமாக அமையும். இதே தான் நாடாளுமன்ற தேர்தலில் கூறினேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. இது நம்முடைய தேர்தல்" என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மேலும், "கூட்டணி என்பது, தேர்தலுக்கு தேர்தல் மாறும். அதிமுகவின் கொள்கை நிலையானது. இந்தியாவிலேயே உண்மையான உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்." என்றிம் கூறியுள்ளார் இபிஎஸ்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி!












Click it and Unblock the Notifications