எம்பி சீட் கிடைக்கலைன்னு.. பொன்னையன் விரக்தியில் பேசுகிறார்! போட்டு தாக்கும் பாஜக துரைசாமி.. மோதல்!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் பாஜகதான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது, பொன்னையன் பாஜக பற்றி பேசியது தவறு.. தனக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்காத விரக்தியில் இப்படி அவர் பேசுகிறார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் அதிமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய பொன்னையன், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில், பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது. அதற்கான பிம்பத்தை ஏற்படுத்த பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும், என்று பொன்னையன் குறிப்பிட்டார்.
பாஜகவின் சமீபத்திய போராட்டங்கள், அரசியல் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டி பொன்னையன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது.

பொன்னையன் என்ன சொன்னார்?
மேலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது. பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை என்றும் பொன்னையன் கருத்து தெரிவித்து இருக்கிறார். பொன்னையனின் இந்த கருத்து அதிமுக - பாஜக இடையில் திடீரென மோதலை உருவாக்கி உள்ளது.

துரைசாமி பதில்
இந்த நிலையில் பொன்னையன் கருத்துக்கு பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்னையன் விரக்தியில் பேசுகிறார். அவர் தனக்கு ராஜ்ய சபா எம்பி சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால். ஆனால் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இருக்கிறார்.

பொன்னையன் விரக்தி
அதிமுக ஒரு எதிர்க்கட்சியாக பணிகளை செய்ய தவறிவிட்டது. திமுகவின் ஊழல்களை அதிமுக வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்க்கட்சியாக அதை செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்கட்சித் தலைவராக வலுவாக செயல்படவில்லை. ஆனால் பாஜக தொடர்ந்து எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக எதிர்கட்சியா?
தமிழ்நாட்டில் அதிமுக எண்ணிக்கைப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும்.. உண்மையான வலுவான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அவர்களிடம் 67 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை. நாங்கள் பாஜகவிடம் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்.

ஆளும் கட்சி
நாங்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை வைத்து வருகிறோம். பாஜகவை பொன்னையன் இப்படி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. பொன்னையன் தவறான கருத்துக்களை தெரிவிக்கிறார். இது பற்றி அதிமுக அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவர் ஏன் இப்படி பேசினார் என்று கட்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விபி துரைசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications