பாஜகவிற்கு மு.க அழகிரி வந்தால் வரவேற்போம் - நூல் விடும் எல். முருகன்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளார் பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கு திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வந்தால் வரவேற்போம் என்று மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். அரசியலில் விட்டு ஒதுங்கி ஓரமாக இருக்கும் அழகிரி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ந்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் மு.க அழகிரியின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது பாஜக.

திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் மதுரையில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தால் மு.க. அழகிரி. மாநில அரசியலில் தனது பாணியில் அதிரடி செயல்களில் ஈடுபட்டு கட்சிக்கு வெற்றி பெற்று தந்தவர் அழகிரி. எல்லாம் கருணாநிதி ஆக்டிவ் ஆக இருந்த வரைக்கும்தான். கடந்த 2011, 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

திமுகவில் மு.க அழகிரியின் செல்வாக்கு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் செயல் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின், தனக்கு கட்சியில் குடைச்சல் கொடுத்த மு.க அழகிரியை திட்டமிட்டே ஓரம்கட்டினார். இதை எதிர்த்து குரல் கொடுத்த அழகிரி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.

சகோதரர்களுக்குள் பிளவு

சகோதரர்களுக்குள் பிளவு

மு.க அழகிரியை கட்சியை விட்டு நீக்கி பல ஆண்டுகள் ஆகி விட்டது சகோதரர்களுடைய விரிசலும் அதிகமாகிவிட்டது.
திமுகவில் தென் மாவட்டங்களில் மு.க அழகிரிக்கு என்று குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்தது. அந்த செல்வாக்கை குறைக்கவே, மாநிலம் முழுவதும் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார் மு.க ஸ்டாலின். அழகிரியின் ஆதரவாளர்கள் பலரையும் தனது வசப்படுத்தினார் ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர முடியாவிட்டாலும் வலிமையான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின்.

அழகிரியின் அதிரடி மூவ்

அழகிரியின் அதிரடி மூவ்

மு.க அழகிரியும் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை. பொதுமுடக்க காலத்தில் வீட்டிற்குள்ளேயே சிறைபட்டிருந்த அழகிரி தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிரடி காட்ட தயாராகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அழகிரியின் தனி ஆவர்த்தனம்

அழகிரியின் தனி ஆவர்த்தனம்

ரஜினியுடன் அழகிரிக்கு நல்ல நெருக்கம் உண்டு. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவரது முதல் விருப்பமாக உள்ளது. இது தொடர்பாக ஓரிரு முறை அழகிரி, ரஜினியுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

பாஜக பக்கம் பார்வை

பாஜக பக்கம் பார்வை

ஒருவேளை ரஜினி தனிக் கட்சி தொடங்காத நிலையில் அழகிரியின் அடுத்த சாய்ஸ் பாஜக அணிக்கு ஆதரவளிப்பதுதான். ஆரம்பத்தில் பாஜகவில் சேராமல் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது. தேர்தலுக்கு பின்னர் நிலைமைகளைப் பொறுத்து முடிவெடுப்பது என்ற யோசனையில் அழகிரி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அழகிரிக்கு பாஜக ஆதரவு

அழகிரிக்கு பாஜக ஆதரவு

இதனிடையே அழகிரி கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். மு க ஸ்டாலினை விட மு.க அழகிரி கெட்டிக்காரர் என்றும் கூறியுள்ளார் ராம ஸ்ரீனிவாசன்.

பாஜக வரவேற்கும்

பாஜக வரவேற்கும்

பாஜகவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளார் எல். முருகன். மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக தகவல் வெளியானதில் இருந்தே அவரைப்பற்றிய செய்திகள் மையம் கொள்ள ஆரம்பித்து விட்டன. இப்போது பாஜக வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டது.

அழகிரியின் நகர்வு

அழகிரியின் நகர்வு

அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் மு.க அழகிரி. ஜனவரி அல்லது அதற்கு மேல் ஆதரவாலர்களுடன் ஆலோசனை நடத்துவேன் என்றும் ஆலோசனைக்கு பிறகு அடுத்தக் கட்ட நகர்வுகளை அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார் அழகிரி. பாஜகவிற்கு அழகிரி செல்வாரா? அவரது அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் திமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+