2026ல் ஆட்சியை பிடிப்போம்.. 3 துருவ போட்டி இருதுருவ போட்டியாக மாறும்.. அண்ணாமலை பேட்டி!
சென்னை : தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026ல் சட்டசபை தேர்தலில் வென்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முடிவடைந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி மொத்தமாக 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இருந்தாலும் பல்வேறு கட்சிகளின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜகவின் வாக்கு சதவிகிதம் 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாமலேயே பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தமாக சுமார் 18 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளனர். கோவை, மதுரை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளனர். இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது. ஆனால் எங்கள் கூட்டணி சார்பாக யாரும் வெற்றிபெறாதது வருத்தம் தான். இதனை படிப்பினையாக எடுத்து கொண்டு பாஜக நிச்சயம் வெற்றியை பெறுவோம். எங்கும் தவறு நடந்தால், நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.
தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறோம். இங்கு வென்றுள்ள 40 இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து கூறி கொள்கிறோம். பாஜக முதல்முறையாக 23 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு கால் பதித்துள்ளது. கோவையில் நான் பெற்றுள்ள 4 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் பெற்றது. 2026ல் இன்னும் நேர்மையாக ஒரு அரசியலை முன்னெடுக்கிறோம்.
கிராமம், நகரம் என்று அனைத்து பகுதிகளிலும் பாஜக வளர்ந்திருக்கிறது. திராவிட கட்சிகளின் தோள்களில் அல்லாமல் பாஜக தனித்து வளர்ந்து வருகிறது. நாங்கள் செல்லக் கூடிய பாதை சரியான பாதை என்று மக்கள் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம். நாங்கள் அதீத தைரியத்துடனே சொல்கிறேன். அதுதான் எங்களின் இலக்கு. அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளது. 3 முனைப் போட்டி இரு முனைப் போட்டியாக மாற வேண்டும். அப்போது தான் பாஜக வெற்றி சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications