நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஜீரோ தான்.. அண்ணாமலையை மீண்டும் சீண்டிய எஸ்.வி சேகர்
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார். ஆனால் அதற்கு தமிழகத்தில் அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறினார்.
சென்னை மயிலாப்பூரில், தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி சேகர் கலந்துகொண்டார். அப்போது எஸ்வி சேகர் பேசியதாவது:- மகளிர் உரிமை தொகையால் வருகிற 2026-ம் ஆண்டு வரை நமக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இதனால் 2026-ல் ஆட்சி மாறினால் இந்த ரூபாய் நமக்கு வராது என்று மக்கள் நினைப்பார்களா இல்லையா?..

சுனாமியின் போது நிவாரண நிதி கொடுத்தது நினைவிருக்கிறதா? ஊட்டியில் கூட சுனாமி நிவாரண நிதி கொடுத்தார்கள்.. ஊட்டியில் கடல் அலை வந்து நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஊட்டியில் சுனாமி நிதி கொடுத்தார்கள். ஏன் தெரியுமா? நிவாரண நிதி என்கிற பெயரை மக்களை கவர்வதற்காக நிவாரண நிதி என்கிற பெயரில் ஒரு திட்டம்.. எல்லா கட்சியும் அப்படி தான். இலவசமே கொடுக்க கூடாது என்று சொன்னார்கள் தமிழக பாஜகவினர்.
பிராமணர்கள் நலவாரியம்: ஆனால் இப்போது வட இந்தியாவில் அப்படியா நடக்கிறது. இதே இலவச தேர்தல் வாக்குறுதிகளை தான் தமிழகத்தில் தேர்தல் நடக்கப்போகும் போது பாஜகவினர் அறிவிப்பார்கள்.. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களிலும் பிராமணர் நல வாரியம் என்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு 50 கோடி ரூபாய். அதாவது ஏழை பிராமணர்களின் கல்வி, வேலைவாய்ப்பு எல்லாவற்றிக்குமாக இதனை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இதனை தமிழகத்தில் செய்ய வேண்டும் என்று நான் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
இதேபோல் ews என்பது ஏற்கனவே தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதம் இருக்கு. அதில் எதுவும் மாற்றம் செய்யவில்லை. ஒரு கல்லூரியில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், அதில் 10 மாணவர்களுக்கு ews க்காக 10 சீட் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது. சாதி சான்றிதழ் கொடுக்க மாட்டேன் என்று சொன்னார்கள்.. ஆனால் இப்போது கொடுக்க்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் இடஒதுக்கீடு வந்ததின் நோக்கம் என்ன?
துர்கா ஸ்டாலின்: வசதி வாய்ப்பு அற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட கூடாது. சமூக நீதி என்று இப்போது பேசுகிறார்கள் என்றால், மேட்டையும் பள்ளத்தையும் சமமாக மாற்றுவது தான் சமூக நீதி.. மேட்டை பள்ளமாகவும், பள்ளத்தை மேடாகவும் மாற்றினால் அது சமூக அநீதி. தமிழகத்தில் பிராமணர்களுக்கு நடப்பது அநீதி. இது இந்த ஆட்சியில் இல்லை. 70 ஆண்டுகாளாக இது தான் நடந்துகொண்டு இருக்கிறது. 50 சதவீதத்தை 69 சதவீதமாக மாற்றியது யார்? ஜெயலலிதா தானே.. திமுகவை திட்டி என்ன பிரயோஜனம்.
ஆனால் தமிழகத்தில் பூநூல் அறுக்கப்படும்போதோ.. குடுமி அறுக்கப்படும்போதோ.. அதனை தடுத்து நிறுத்தியவர் எம்.ஜி. ஆர். தான். அது இப்போதும் நடக்கிறது. வீரமணி இப்போதும் எதாவது பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் தேர்தல் வரும்போது அவரை ரூமில் வைத்துவிடுவார்கள். தயவு செய்து வெளியில் வராதீர்கள் என்று.. துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.
பாஜவின் பங்கு ஜீரோ: கடவுள் இல்லை என்று சொல்கிறவர் வீட்டில் இருந்து ஒருவர் கோவிலுக்கு வந்தால் அதனை வரவேற்க வேண்டும். அதனை ஏன் கிண்டல் செய்கிறீர்கள். அவர் வரமாட்டேன் என்று சொல்கிறார் நீங்க ஏன் வற்றீங்க என்று.. எப்போதுமே வராதவர்களை பற்றி தான் எல்லாரும் பேசுவாங்க.. நான் வராதவர்களை பற்றி கவலை கொள்ள மாட்டேன். தமிழகத்தில் பிராமணர்கள் நலவாரியம் அமைக்கட்டும். ஆயிரம் கருத்து இருக்களாம். நம் சமூகம் முன்னேற வேண்டுமா இல்லையா.
இதற்காவது நாம் ஒன்று சேர வேண்டுமா இல்லையா.. பிராமணர்களை எதிர்க்கிறேன் என்று சொல்பவர்களின் வீட்டில் எல்லாம், டாக்டர், வக்கீல், ஆடிட்டர், எல்லாரும் அய்யர்களாக தான் இருக்கிறார்கள். அவங்க நம்பிக்கை வைத்திருக்காங்க. கொள்கைக்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2024 ம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி முழு மெஜாரிட்டியியுடன் வெற்றி பெறுவார். ஆனால் அதற்கு தமிழகத்தில் அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அண்ணாமலையின் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications