4 சீட்டும் போயிடும்! தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை தேர்தல் நடந்தால் பாஜக "வாஷ் அவுட்"! புள்ளி விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை தேர்தல் நடந்தால் பாஜக தற்போது வைத்துள்ள 4 இடங்களிலும் தோல்வி அடையும் என்று லோக்சபா தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கும் சட்டசபை தொகுதியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை வாரியாக விவரம்: 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.
8 இடங்களில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது. 3 தொகுதிகளில் பாமக முதலிடம் பிடித்துள்ளது. 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக/தாமரை போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை. அதிமுக 8 தொகுதிகளில் அதாவது எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாமக 3 தொகுதிகளில் பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது. தேமுதிக 2 தொகுதிகளில் திருமங்கலம், அருப்புக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் இல்லை. அதிமுக 8 தேமுதிக 2 பாமக 3 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாஜக சரிவு: இந்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக கிளீன் ஸ்வீப் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக படுதோல்வி அடையும் என்றும் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன. தற்போது பாஜகவிடம் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இப்போது சட்டசபை தேர்தல் நடந்தால் அதிலும் பாஜக தோல்வி அடையும் என்று தேர்தல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஸ்வீப்: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடத்தில் கூட வென்றது இல்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக தொடர் தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications