விஜய் கட்சியால் திமுக, அதிமுக ஓட்டு தான் சிதறப்போகுதாம்.. பாஜக சேஃப்.. எச்.ராஜா சொல்லும் கணக்கு!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் வாக்குகள் தான் சிதறும், பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி உள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி களமிறங்கும் நிலையில் பல கட்சிகளுக்கு சவாலாக விஜய் விளங்குவார் எனக் கூறப்படும் நிலையில் எச்.ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். விஜய்யின் அரசியல் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில் இந்த மாதம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார் விஜய். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

விஜய் கட்சி, தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் பல அரசியல் கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டதால், திமுக அரசு விஜய்யை பார்த்து பயப்படுவதாகவும், அதனால் தான் சிக்கல்களை கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எச். ராஜா தமிழக வெற்றிக் கழகத்தால் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய எச்.ராஜா, நீட் தேர்வு ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என திராவிட கட்சிகள் பேசுவதையே விஜய்யும் பேசலாம். விஜய் அப்படி பேசினாலும் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால் அதனால் திராவிட கட்சிகளின் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது. திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக் கழகத்தால் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சி தான் பாதிக்கும். திராவிட கொள்கை உடையவர்களால் பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கும், தனது அரசியல் கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்துவதற்கும் எச். ராஜா வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யோடு பாஜக கூட்டணி வைக்குமா என்பது குறித்து நான் பதில் கூற முடியாது. கூட்டணி சம்பந்தமாக எப்போதும் நான் கருத்து தெரிவித்தது கிடையாது. பாஜக-வில் அதற்கென்று ஒரு அமைப்பு உள்ளது. அதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்றும் எச்.ராஜா கூறி இருந்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என பெரும் விவாதமே அரசியல் களத்தில் நடந்து வருகிறது. விஜய் பிரதானமாக எந்தக் கட்சியை எதிர்த்து அரசியல் செய்வார், தனித்து நின்றால் எதிர்காலம் இருக்கிறதா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகிறது. விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஏற்கனவே சில கட்சிகள் விருப்பம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில், விஜய் கட்சியால் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு, பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என எச்.ராஜா கூறியது கவனத்திற்குரிய பார்வையாக உள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை?












Click it and Unblock the Notifications