“ஆட்சியமைக்க முயற்சிக்கும் எந்தவொரு கட்சிக்கும் பாஜக ஆதரவளிக்காது” - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை, யாருக்கும் நாங்கள் ஆதரவு தருவதாகவும் இல்லை" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் பாஜக இணையாது என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவாகி உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழல் நிலவுகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

Nainar Nagendran

இதற்கிடையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்ற செய்திகள் வெளியாகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு முறை விஜய் ஆளுநரை சந்தித்து அட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் ஆளுநர் அர்லேகர் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி தங்களிடம் தேவையான பெரும்பான்மை பலம் இருப்பதை காட்ட வேண்டும், பெரும்பான்மையை நிரூபிக்காமல் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியாது என்று ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திமுக - அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் 118 என்ற மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, பதில் அளித்துள்ள ஆளுநர் அர்லேகர், "மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் யாராவது வந்தால், நான் அதை பரிசீலிக்க வேண்டும். அதுதான் ஜனநாயக முறை" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.

Nainar Nagendran

மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+