தமிழ்நாட்டில் சொல்லி அடிக்கும் பாஜக.. 5 இடங்களில் வெற்றி வாய்ப்பு.. எங்கனு பாருங்க! NEWS 18 கணிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக 5 சீட்களை கைப்பற்றும் என நியூஸ் 18 - சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை விட பாஜக தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவித்துள்ளது நியூஸ் 18 போல் ரிசல்ட்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. இவற்றை தவிர, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. முன்னணி செய்தி ஊடகமான நியூஸ் 18 - சி.என்.என் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் INDIA கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கும் INDIA கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பல்வேறு கணிப்புகளில் திமுக 36க்கும் அதிகமான இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், நியூஸ் 18 கணிப்பு பாஜக 5 இடங்களில் வெல்லும் எனக் கணித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 13% வாக்குகளையும், அதிமுக 17 % வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியை விட குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றாலும் கூடுதலாக 1 சீட்டில் வெல்லும் என்கிறது நியூஸ் 18 கருத்துக்கணிப்பு ரிசல்ட்.
மேலும், தமிழ்நாட்டின் எந்தெந்த மண்டலங்களில் பாஜக வெல்லும் என்றும் இந்தக் கணிப்பில் விரிவாக அலசப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி டெல்டா பகுதியில் 1 இடத்திலும், சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளிலும் என மொத்தமாக 5 இடங்களை பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை பாஜக 5 இடங்களில் வெல்லும் என நியூஸ் 18 தேர்தல் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications