Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமிய வாக்குகளை அள்ளிக்குவித்த பாஜக! கம்யூனிஸ்ட் கோட்டையில் அடித்து உடைத்து வெற்றி! மலர்ந்த தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சாநகர் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கமியூனிஸ்டுகள் வலிமையாக இருக்கும் இந்த தொகுதிகளில் பாஜக வென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 தொகுதிகளில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகி வருகின்றன ,. உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி, ஜார்கண்டின் டும்ரி, தன்பூர் திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் உத்தரகாண்டின் பாகேஷ்வரிலும் தேர்தல் நடந்தது. இந்த 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி வேட்பாளர் களமிறக்கப்பட்டார்.

 BJP won the both by election constituencies in Tripura: Which was once stronghold of CPIM

மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளிவிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளியில் கட்சிகள் தனி தனியாக போட்டி. இங்கே இந்திய கூட்டணி ஒன்றாக களமிறங்காமல் ஒரு சில கட்சிகள் மட்டும் தனி தனியாக இறங்கின. இதற்கான தேர்தல் முடிவுகள்தான் தற்போது வெளியாகி வருகின்றன,

தன்பூர் மற்றும் போக்ஸாநகர், திரிபுரா: திரிபுராவில் உள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் இடைத்தேர்தல்களில் சிபிஐ (எம்) மற்றும் ஆளும் பாஜக இடையே நேருக்கு நேர் போட்டி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸும், திப்ரா மோதாவும் இரண்டு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை, இது சிபிஐ (எம்) க்கு சாதகமாக மாறி இருந்தது. அதனால் இரண்டிலும் சிபிஎம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

தான் வென்ற லோக்சபா சீட்டை தக்க வைப்பதற்காக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பிரதிமா பௌமிக் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தன்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.

ஒரு காலத்தில் இடதுசாரிகளின் வலுவான கோட்டையாக இருந்தது தன்பூர். ஆனால் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக பாஜக வசம் செல்ல தொடங்கி உள்ளது, பாஜகவின் பிந்து தேப்நாத் மற்றும் சிபிஐ (எம்) இன் கவுஷிக் சந்திரா ஆகியோருக்கு இடையே இன்று பலப்பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. 1972ல் இருந்தே இது சிபிஎம் தொகுதி ஆகும்.

இங்கே 1998ல் இருந்து 2018 வரை மாணிக் சர்க்கார்தான் எம்எல்ஏவாக இருந்தார். தொடர்ந்து இங்கே 5 முறை வென்றார். ஆனால் இப்போது இந்த தொகுதியில் பாஜகவின் பிந்து தேப்நாத் வென்றுள்ளார். 30017 வாக்குகள் வென்று பாஜகவின் பிந்து தேப்நாத் வென்றுள்ளார். சிபிஎம் வேட்பாளர் கவுஷிக் சந்திரா 11146 பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

போக்சாநகர்: திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் போக்சநகர் ஒன்றாகும். இது சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ளது. மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இங்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கே சிறுபான்மையினர் அதிகம் உள்ளனர்.

 BJP won the both by election constituencies in Tripura: Which was once stronghold of CPIM

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ (எம்) கட்சியிடம் தோல்வியடைந்த தஃபஜல் ஹுசைனை போக்ஸாநகரில் பாஜக மீண்டும் களமிறக்கிக்கி உள்ளது. சிபிஐ (எம்) கட்சி சார்பாக இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த சாம்சன் ஹக்கின் மகன் மிசான் ஹுசைன் இங்கே வேட்பாளராக களமிறங்கி இருந்தார்.சாம்சன் ஹக்கின் மரணம் காரணமாகவே இங்கே இடைத்தேர்தல் நடந்தது.

இது 2003- 2023 வரை சிபிஎம் தொகுதி ஆகும். இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில் பாஜகவின் தஃபஜல் ஹுசைன் வென்றுள்ளார். 34146 வாக்குகள் பெற்று அவர் வென்றுள்ளார். சிபிஎம் வேட்பாளர் மிசான் ஹுசைன் 3909 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இஸ்லாமியர்கள் அதிக உள்ள தொகுதியில் சிபிஎம் நிறுத்திய இஸ்லாமிய வேட்பாளரை எதிர்த்து பாஜக நிறுத்திய இஸ்லாமியர் வேட்பாளர் வாக்குகளை அல்லி கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்குகள்; வித்தியாசத்தில் வென்றுள்ளார்.,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+