அவர் கழன்றுகொள்வார்! விஜய் பற்றி அமித் ஷாவிற்கு போன சீக்ரெட் தகவல்! உடனே எடப்பாடிக்கு பறந்த மெசேஜ்
சென்னை: கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் கடுமையாக புகழ்ந்தபடி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறிய நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

எடப்பாடி குறித்து நயினார்
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், எங்களது கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்த பின் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுதான். யாரும் மன வருத்தத்தில் இல்லை. இனி பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருவார்கள். எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று கூறி உள்ளார்.
எடப்பாடி குறித்து அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: "அண்ணாமலை இந்தக் கட்சியின் ஒரு தொண்டன். சாதாரண தொண்டனாக இருப்பதில் எனக்கு பெருமை. கட்சியில் எங்களுக்குள் 1,008 விஷயங்கள் இருக்கலாம். 2026 தேர்தலில் இப்படி செல்லலாம், 2031 அப்படி செல்லலாம் என்று எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தலைவர்கள் ஒருங்கிணைந்து 2026 தேர்தலுக்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று சென்னையில நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறிவிட்டோம். அதன் பிறகு அதை பின்பற்றுவது கட்சிக்கு நல்லது. அதன்படி நான் செல்கிறேன்.
சமீபத்தில் தமிழ்நாடு வந்த அமித் ஷாவும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறினார். இப்படி கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் கடுமையாக புகழ்ந்தபடி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அமித் ஷா அனுப்பிய மெசேஜ்
அதிமுக உடன் மோதல் போக்கு வேண்டாம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா அதிமுக தலைவர்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. விஜய் பற்றி அமித் ஷாவிற்கு கிடைத்த தகவல் ஒன்றே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறார். எடப்பாடி பழனிசாமியை இப்போது பகைத்தால், அவர் கூட்டணியை விட்டு கழன்று கொள்வார். தவெக கூட்டணிக்கு செல்வார். விஜய் இதற்கு தீவிரமாக முயல்கிறார். எடப்பாடிக்கு தேவையானதை நாம் கொடுக்கவில்லை என்றால்.. எடப்பாடி பழனிசாமியை இப்போது பகைத்தால் அவர் தவெக கூட்டணிக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன என்று அமித் ஷா எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்தே பாஜகவினரான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications