ஈசிஆர் ஹோட்டலில் பகீர்.. பாஜக பெண் பிரமுகருக்கு ஆபாச மெசேஜ்.. நடுரோட்டில் நடந்த சம்பவம்
சென்னை : பைக் ரேஸரும், பாஜக நிர்வாகியுமான அலிஷா அப்துல்லாவுக்கு ஒரு ஆண் பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அந்த நபரை அலிஷாவே தன் காரில் சிறைபிடித்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரபல பைக் மற்றும் ரேஸரான அலிஷா அப்துல்லா, கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராகவும் உள்ளார். ஏற்கனவே திருச்சி சூர்யா அவரை விமர்சித்தபோது பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அலிஷா அப்துல்லா தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் நான் இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். ஃபெரோஸ் என்ற நபர் என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி படுக்கைக்கு அழைக்கிறார். ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் வேறு ஏதாவது காவல்நிலையம் சென்று புகாரளியுங்கள் என்று கூறுகிறார்கள். இவனை நானே அம்பலப்படுத்த வேண்டும் என்று இங்கு அழைத்துள்ளேன். பாருங்கள் அவன் கூலர்ஸ் அணிந்து காரில் பந்தாவாக அமர்ந்து கொண்டிருக்கிறான். பெண்கள் இதுபோன்ற ஆண்களை சும்மா விடக்கூடாது என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அலிஷா தன்னிடம் பாலியல் சீண்டலில் பேசிய ஃபெரோஸ் மற்றும் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரையும் காட்டியுள்ளார். காரில் பந்தாவாக அமர்ந்திருந்த ஃபெரோஸின் தலையில் ஒரு அடியும் வைத்தார்.
இதுகுறித்து தன் பதிவில் மேலும் விரிவாக குறிப்பிட்டுள்ள அலிஷா, இந்த நபர் எனக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் படுக்கைக்கு அழைக்கிறான் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்றெல்லாம் தகாத முறையில் பேசுகிறான். நான் தங்கியுள்ள Ginger Hotel Omr நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் தகவல் சொல்லியும் நடவடிக்கையும் இல்லை.
மணிக்கணக்கில் காத்திருந்தும் பலனில்லை. அதனால் அவனை நானே ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்து வந்து காரில் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தேன். இது இன்று நான் சந்தித்த மிகவும் வேதனையான சம்பவம்.
இதேபோல எத்தனை பெண்கள் தினமும் காவல்துறையின் ஒரு துளி கூட பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த நபர் போதை மருந்து உட்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ்ஸையும் டேக் செய்துள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அலிஷாவின் செயலை பாராட்டி வருகிறார்கள். உங்களின் தைரியமான செயலுக்கு பாராட்டுகள். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் நீதி கிடைக்கும் என்று அலிஷாவுக்கு பலர் ஆறுதல் கூறியுள்ளனர்.
மேலும் சம்மந்தப்பட்ட நபரை பிடித்துக் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல்துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்துள்ளனர். ஒரு நடிகையை ஹைதராபாத் சென்று கைது செய்யும் காவல்துறை, தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் மோசமான செயல் என கமென்ட் செய்து வருகின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications