Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வருகிறது.. இந்த தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை அந்தந்த அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.. அதிலும், திரைக்கு முன்னால் தலைவர்கள் பேசினாலும், திரைக்கு பின்னால் இருந்து அவர்களை இயக்கும் "அரசியல் ஆலோசகர்கள்" தான் பல நேரங்களில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள்.. அந்த வகையில், தவெகவில் தற்போதைய நகர்வுகளை திட்டமிடும் ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் இப்போது மிகத் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.. அதை பற்றின ஒரு பிரத்யேக செய்திதான் நமக்கு கிடைத்துள்ளது.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் ஜான் ஆரோக்கியசாமி.. இவர் வெறும் பெயரளவில் ஆலோசகர் கிடையாது.. தமிழக அரசியலின் நாடி துடிப்பை கடந்த ஒரு தசாப்த காலமாக மிக நெருக்கத்திலிருந்து கவனித்து வருபவர்..

BJP Vijay TVK Silent Killer Tamil Nadu Assembly Election 2026 TN Election special 2026

ஜான் ஆரோக்கியசாமியின் கல்வி பின்னணியே அவரது வியூகங்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது.. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும், சென்னை லயோலா கல்லூரியில் தொழில் மேலாண்மையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்..

யாரிந்த ஜான் ஆரோக்கியசாமி

அரசியலுக்கு வருவதற்கு முன்பே, ஆப்பிள் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு பிராண்டிங் ஆலோசனைகளை வழங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.. ஒரு பொருளை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வணிக ரீதியான வித்தையை, அவர் அரசியலுக்கு மிக திறமையாக பொருத்துவதே அவரது ஸ்பெஷாலிட்டியாக உள்ளது.

அரசியல் களத்தில் ஜான் ஆரோக்கியசாமியின் வருகைக்கு பிறகுதான் தமிழகத்தில் நவீன பிரசாரம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது.. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் அன்புமணி ராமதாஸை முன்னிறுத்தி, "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற முழக்கத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்த்தது ஜான் ஆரோக்கியசாமியின் "ஜேபிஏசி பெர்சோனா" நிறுவனம் தான்..

அன்புமணியின் வெற்றி

சாதி அடையாளத்தைத் தாண்டி ஒரு நவீன தலைவராக அன்புமணியைக் காட்டியதில் ஜானின் பங்கு மிக முக்கியமானது.. அதேபோல், 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதற்குப் பின்னாலும் ஜானின் வியூகங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது..

அரசியல் ரீதியாக ஜான் ஆரோக்கியசாமி ஒரு சைலண்ட் கில்லாடி என்கிறார்கள்.. ஊடக வெளிச்சத்தில் அதிகம் படாமல், வெறும் டேட்டாக்கள், மற்றும் மக்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு அவர் செயல்படுகிறாராம்..

பாஜக B டீம்

குறிப்பாக, மார்ச் 2026-ல் தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், விஜய்யிடம் அவர் முன்வைத்திருக்கும் வாதங்கள் வெறும் கூட்டணி கணக்குகள் மட்டுமல்ல.. ஒரு கட்சி எப்படித் தனது சுயத்தை இழக்காமல் அடுத்த நிலைக்கு நகர வேண்டும் என்பதற்கான நீண்ட காலத் திட்டங்களாகும்.. பாஜகவின் B-டீம் என்ற விமர்சனத்தை உடைக்க அவர் காட்டும் அதிரடி வழிகள், தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முதிர்ச்சியானதாகப் பார்க்கப்படுகிறது..

ஒரு கட்சிக்கு ஆட்களைத் திரட்டுவதை விட, அந்த தொண்டர்களுக்கு ஒரு கொள்கை ரீதியான பாதையை அமைத்துக் கொடுப்பதுதான் சவாலான காரியம்.. ஜான் ஆரோக்கியசாமி அந்தப் பணியைத் தான் இப்போது செய்து வருகிறார்..

இமேஜ் மேக்ஓவர்

புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களின் களப்பணி ஒருபுறம் இருந்தாலும், ஜானின் அறிவுப்பூர்வமான வியூகங்கள் தான் விஜய்யை ஒரு முழுநேர அரசியல் தலைவராக நிலைநிறுத்த உதவும்.. அன்புமணி மற்றும் சீமானுக்கு அவர் கொடுத்த "இமேஜ் மேக்ஓவர்" இப்போது விஜய்க்கு எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

காரணம், விஜய்யின் அரசியல் முழக்கங்கள் அனைத்தும் திராவிட மற்றும் தமிழ் தேசிய அரசியலுக்கு நெருக்கமாகவே இருக்கின்றன.. குறிப்பாக, பாஜகவை "கருத்தியல் எதிரி" என்றும், திமுகவை "அரசியல் எதிரி" என்றும் விஜய் ஏற்கனவே அடையாளப்படுத்தியுள்ளார்.. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்தால், கடந்த ஓராண்டாக விஜய் கட்டி எழுப்பிய அரசியல் பிம்பம் ஒரே நாளில் சரிந்துவிடும் எனத் தொண்டர்கள் அஞ்சுகிறார்கள்..

மறுபுறம், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.. அதிமுக மற்றும் பாஜக இடையே நிலவும் விரிசல், தவெகவிற்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும்..

பாஜக தேசிய முகம்

ஆனால், தவெக - பாஜக கூட்டணி அமைந்தால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, இறுதியில் திமுகவிற்கே சாதகமாக முடியும் என்ற அரசியல் கணக்கும் இங்கே கவனிக்கத்தக்கது.. அதிமுகவுடனான கூட்டணி கூட தொண்டர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் பாஜகவின் "தேசிய முகம்" தமிழகத்தில் தவெகவிற்கு ஒரு சுமையாகவே மாறும் என்பது ஜான் ஆரோக்கியசாமியின் அழுத்தமான கணிப்பு..

தவெக ஒருவேளை பாஜகவுடன் இணைந்தால், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகளை அக்கட்சி முழுமையாக இழக்க நேரிடும்.. இது நீண்ட கால அடிப்படையில் விஜய்யை ஒரு பலவீனமான தலைவராகவே மாற்றும் என்பதையும் இங்கு நாம் அழுத்தமாக சொல்ல வேண்டி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!


- நமது சிறப்பு நிபுணர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+