எத்தனை பொய்கள்.. எங்கள் காதுகள் பாவம் இல்லையா? பாஜகவின் பொய் கணக்கு! லிஸ்ட் போட்டு ஸ்டாலின் அட்டாக்
சென்னை: பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும், எங்கள் காதுகள் பாவம் இல்லையா என்று பாஜகவின் பொய் கணக்கை லிஸ்ட் போட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டது.

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த முறை பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறியதால் டிடிவி தினகரனின் அமமுக, பாமக, ஓ பன்னீர்செல்வத்தோடு கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
ஸ்டாலின் விமர்சனம்: இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும், எங்கள் காதுகள் பாவம் இல்லையா என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு!.. இதில் இரண்டு கூறுகள் உள்ளன:
உபிக்கு அள்ளிக்கொடுக்கிறது:
1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.
இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

எய்ம்ஸ்க்கு 1,960 கோடி:
2) ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.
இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?
* இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,
* ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,
* சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு. இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?..
காதுகள் பாவமில்லையா: இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது! தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!.. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கை: முன்னதாக பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை அதன் தலைமை அமைத்து இருந்தது. 'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 14 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பிநட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications