எம்பினா என்னனு விஜய்க்கு யாராவது சொல்லுங்க.. அதிமுகவுடன் கூட்டணியா? பொடி வைத்து பேசிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படும் எனவும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி குறித்து காலமும் நேரமும் வரும்போது பேசுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், எம்பிக்கள் என்றால் என்ன என்பதை விஜய்க்கு யாராவது சொல்லி கொடுங்கள் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு தமிழக பாஜக, 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை இன்று தொடங்கியது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் 'சமக்கல்வி - எங்கள் உரிமை' என்கிற இணையத்தளத்தையும், பாடலையும் வெளியிட்டது.

annamalai vijay bjp

மேலும், Puthiyakalvi.in எனும் இணையதளத்தை தொடங்கியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை," சமக்கல்வி எங்கள் உரிமை இணையதளம் 6 மொழிகளில் உள்ளது, மாற்று மொழி பேசுபவர்கள் கூட தமிழகத்தில் உள்ளனர். எனவே எந்த மொழியில் வேண்டுமானாலும் சென்று Digital Signature போட்டுக் கொள்ளலாம். மே மாதம் இறுதிக்குள் 1 கோடி கையெழுத்து வாங்கிய பின்னர் ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளோம். இது தொடர்பாக வரும் மார்ச் 21 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி அடுத்தடுத்து பாஜகவின் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழகத்தின் அனைத்து பாஜக மண்டல்கள் இருக்கும் இடங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் குரலாக இந்த பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களை பார்த்து, முதல்வர் அவர்களே தனது மனதை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது அரசியல் ரீதியான போட்டி இல்லை, மக்களின் எண்ணங்களுக்கு நேர்மறையாக உள்ளதால் மக்களின் எதிர்காலத்திற்காக இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. மே 2026 இல் புதிய ஆட்சி இங்கே வரும் போது புதிய கல்விக் கொள்கை இங்கே அமல்படுத்த பட வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமமுக சார்பாக பங்கேற்றவர்கள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசவில்லை, பின் எதற்கு இந்த கூட்டம் என கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை நிலைபாடு மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் எங்களுக்கு இன்னும் புரியவில்லை, எதற்காக இந்த அனைத்துக் கட்சி கூட்டம்? இந்தி கூட்டணியில் உள்ள ராகுல்காந்தி ஒரு போன் அழைத்து இருந்தால் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல்வருக்கு 848 என்று யார் சொன்னார்கள்? அந்த தகவலை யார் சொன்னார்கள் என சொல்லி இருந்தால் கூட எங்கள் தலைவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்று இருப்பார்கள். முதல்வரின் செயல்பாடுகள் நக்சலைட்டுகள் போல தான் உள்ளது, பொறுப்பான ஒரு முறையில் அவர் செயல்படவில்லை. அவர் மத்திய அரசின் மீது நக்சல்கள் கிளர்ச்சி ஏற்படுத்துவது போல செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளது, அதை எல்லாம் விட்டுவிட்டு சம்மந்தமே இல்லாமல் ஒன்றை பேசி வருகிறார்.

NCRD 2022 Data பொறுத்த வரை 8.1 சதவிகிதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது 2021 ஐ ஒப்பிடும் போது அடிப்படையில் பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை அதிகரித்து வருவதற்கு சான்றாக உள்ளது.

திமுக இடையேயான பிரச்னை குறித்து கேட்டதற்கு, இரு கட்சிகளின் முடிவுகள் அவர்களை சார்ந்தது, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நேற்று அமமுக சார்பில் டிடிவி தினகரன் அவர்களை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் போது 2026 இல் கூட்டணி தொடரும் என கூறி இருந்தார். எங்களை பொறுத்தவரை அதிமுக உடன் நாங்கள் மறைமுகமாக பேசவில்லை. அதிமுக இப்போது எதிர்கட்சியாக உள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் வைக்க வேண்டும் என பேசி வருகிறார். நேரமும், காலமும் வரும் போது இதுகுறித்து நாங்கள் பேசுவோம், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த தலைவர்கள் இருப்பார்கள் என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் தமிழர் வரலாற்று சிறப்பான செங்கோல் நிறுவிய போது திமுக நாடாளுமன்றத்தில் நுழைய கூட இல்லை. ஏன் இவ்வாறு எதிர்ப்பாக உள்ளனர்? முதல்வருக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார், ஆனால் அவற்றை எல்லாம் முதல்வர் ஏன் கண்டுகொள்ளவில்லை?

தமிழ்நாடு முதல்வர் பிரதமரின் திட்டங்களை காப்பி அடித்து தனது திட்டமாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசு தமிழில் பெயர் வைத்து வந்துள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம், விவசாயிகள் கடன் உரிமைத் திட்டம் ஆகியவற்றை ஏன் பிரபலப்படுத்தவில்லை, முக்கியத்துவம் வழங்கவில்லை? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கூட இவ்வாறு தான் செய்தார்கள்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் அழைக்கப்பட்ட திமுக, திக உட்பட 45 கட்சிகளுக்கும் பாஜக கடிதம் எழுத உள்ளோம்.

வரிசையமைப்பு தொடர்பாக அவர்களது சந்தேகங்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் கொடுக்க உள்ளனர்.. அவர்களுக்கு உண்மையில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா? என அவர்களின் சந்தேகங்களை தீர்க்க உள்ளோம். நாளை, நாளை மறுநாள் ஒவ்வொரு கட்சிக்கும் கடிதம் எழுத உள்ளோம். திராவிட கழகமாக இருந்தாலும் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து விளக்க உள்ளோம்.

நான் நினைக்கிறேன், திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு இருக்கைகளாக எண்ணி எண்ணி 848 என சொல்லி இருப்பார்கள் போல. பழைய பாராளுமன்ற கட்டிடம் 100 வருடம் பழமையானது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் பெரிய அளவில் அடுத்த கட்டத்திற்கு தான் கட்ட வேண்டும். அதில் உள்ள இருக்கைகளை எண்ணி கூறுவது என்ன என்று தெரியவில்லை.

அடுத்தபடியாக கமல் ஹாசன் இந்தியாவா, ஹிந்தியாவா என பேசி உள்ளார். கமல் அவரது ராஜ்யசபா சீட்டை இன்றே உறுதி செய்துவிட்டார். அவருக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள். அடுத்ததாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். எம்பிக்கள் என்றால் என்ன என்பதை விஜய்க்கு யாராவது சொல்லி கொடுங்கள்.

கையெழுத்து இயக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை. அவரவர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் இதில் கலந்து கொள்ளவில்லை. நாளை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை அவர்கள் தொடங்கி வைப்பார்கள்." என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+