Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதீப் என் கல்லூரி நண்பர்.. 12 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படம் அது.. வினோஜ் பி செல்வம் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த்-க்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் தனது கல்லூரி நண்பர் என்று பிரபல பாஜக நிர்வாகி வினோ பி செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த புகைப்படத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பேசி வருவதாக கூறிய அவர், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்காமல் கைது செய்திருப்பதை பாராட்டி இருக்கிறார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத் என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். இந்த பிரசாத்திடன் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதீப் என்பவர் மூலம் போதைப்பொருள் பெற்று வந்தது தெரிய வந்தது.

BJP s Vinoj P Selvam Clarifies Drug Case Link with Pradeep College Friend of His

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது

இதனைத் தொடர்ந்து பிரதீபை கைது செய்த போலீசார், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அந்த விசாரணையில் பிரதீப், பெங்களூரில் இருந்து பெங்களூரில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதன்பின் இவரின் கூட்டாளியான கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலரையும் கைது செய்துள்ளனர்.

வினோஜ் பி செல்வம் விளக்கம்

இதனிடையே கைதான பிரதீப் உடன் பாஜகவின் பிரபல நிர்வாகியான வினோஜ் பி செல்வம் இருக்கும் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், பிரதீப் உடனான தொடர்பு குறித்து வினோஜ் பி செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வினோஜ் பி செல்வம் பேசுகையில், இந்த விவகாரத்தில் போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

காவல்துறைக்கு பாராட்டு

ஏனென்றால் முதல்முறையாக திரைத்துறையினருக்கு எந்த சலுகையும் கொடுக்காமல் உடனடியாக கைது செய்திருக்கிறார்கள். அது பெரிய விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு என்று தனி சட்டமே இருக்கும். ஆனால் இம்முறை எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும். ஏனென்றால் போதைப்பொருள் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் விஷயம்.

கல்லூரி நண்பர்

மதுபானத்தைவிட 100 மடங்கு மோசமானது. போதைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்க நபர் நான். அதேபோல் போதைக்கு எதிராக செயல்படக் கூடிய கட்சி பாஜக. அப்படியான சூழலில், எப்போதோ எடுக்கப்பட்ட புகைப்படம் அது. கல்லூரி படிக்கும் போது யாருடன் படிக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. 10 ஆண்டுகளுக்கு பின் உடன் பழகுகிறவர்கள் கோடீஸ்வரனாகிறானா, கொள்ளைக்காரனாக மாறுகிறானா என்பது தெரியாது.

ஜாபர் சாதிக் விவகாரம்

அது ஜாலியாக ஒரு வாழ்க்கை. ஆனால் ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறி வைப்பது வேடிக்கையான விஷயம். இதனை கடந்து போய் கொண்டே இருப்பேன். எங்களின் குறிக்கோள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் எடுக்காதே நபர்களே திமுகவில் இல்லை. ஆனால் பிரதீப் உடன் நான் இருக்கும் புகைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது.

கோரிக்கை

அப்போது என் நண்பராக இருந்தார். அதனை மறுக்கவில்லை. ஆனால் பிரதீப் உடன் தொடர்பில் இல்லை. ஒருவேளை பிரதீப் உடன் தொடர்பில் இருந்திருந்தால், அவரை அந்த பாதைக்கு செல்லவிடாமல் காப்பாற்றி இருப்போம். ஆனால் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது என்னுடைய கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+