திருப்போரூரில் சகதியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்! கருப்பு பெட்டியை மீட்ட விமான படையினர்!
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த திருப்போரூர் அருகே இந்திய படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அதன் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. மேலும் உப்பளம் பகுதியில் 15 அடி ஆழ சகதியில் புதைந்த விமானத்தின் பாகங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

திருப்போரூர் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விமானத்தில் பயணித்த 3 பேர், பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து முன்னதாக கீழே குதித்து உயிர் தப்பினர்.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம், உப்பள சகதியில் விழுந்து நொறுங்கியது. அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் விமானம் விழுந்த போது யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆயினும் உப்பளம் தயாரிப்பு நிறுவனத்தின் மேற்கூரை மீது விமானம் விழுந்ததால் பலத்த சப்தம் எழுந்தது.
இதனால் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விமானியை தேடும் பணியில் இருந்தனர்.
அப்போது அவர் சாலையோரத்தில் இருந்ததை கண்டு அவரை மீட்டனர். அவரிடம் விசாரித்ததில் , தனது பெயர் சுபன் (36) என்றும் தான் குவாட் லீடர் என்றும் தெரிவித்தார். விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விமானத்தில் எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
அதை சரி செய்ய முயன்று செய்வதறியாமல் இருந்த நேரத்தில் விமானம் கீழே விழுந்ததாகவும் அப்போது பாராசூட் மூலம் பாதுகாப்பாக குதித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விமானியை விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை விமான படையினர் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் என்ன பேசினார். இரு விமானிகளும் என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்பதை அறிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணிகள் இன்று 2 ஆவது நாளாக தொடர்ந்தது.
அப்போது ஒரு சகதியில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. மேலும் 15 அடி ஆழத்தில் உள்ள விமானத்தின் பாகங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்தால் விமானத்தில் என்ன பிரச்சினை என்பது தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications