வரிந்து கட்டிய கட்சிகளின் கறுப்புக் கொடி போராட்டம்.. அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை ரத்து?
சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியதால் தமிழ்நாட்டுக்கு நாளை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில் அமித்ஷாவின் நாளைய தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ வருகை தருவார்; டிசம்பர் 28-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் பாஜக மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைப்பார்; பின்னர் திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார். இதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் அமித்ஷாவின் நாளைய தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமித்ஷா, தமிழ்நாடு வருகை தருவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications