Blue Moon: ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை.. மே மாதத்தில் வானில் நடக்க போகும் அரிய நிகழ்வுகள்.. எப்போது பார்க்கலாம்?
சென்னை: மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்த மாதம் தோன்ற உள்ளது. வெறும் கண்ணாலேயே பார்க்க கூடிய இந்த அரிய நிகழ்வுகள் எப்போது வானில் தோன்றும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
நடப்பு மே மாதத்தில் வானில் சில அதிசய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த மாத இறுதியில் ப்ளூ மூன் தோன்றுகிறது. ப்ளூ முன் என்பதால், நிலா, வானத்தில் நீல நிறமாக தோன்றுமோ என நினைக்க வேண்டாம். இந்த ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றுவதை குறிப்பார்கள்.

ப்ளூ மூன் - எப்போது, எப்படி பார்க்கலாம்?
அதாவது, இந்த மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றுகின்றன. மே 1 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றிய நிலையில் மே 31 ஆம் தேதியில் பவுர்ணமி வருகிறது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வருவதே ப்ளூ மூன் ஆகும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவது எப்போதாவது ஒருமுறை நடக்கூடிய நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வுக்கு ப்ளூ மூன் என்று சொல்கிறார்கள்.
விண்கல் மழை நிகழ்வு
இதோடு மற்ற ஒரு நிகழ்வு இந்த மாதம் நிகழப்போகிறது. அதாவது, மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எட்டா அக்வாரிட் எனப்படும் விண்கல் மழை நிகழப்போகிறது. வானில் ஒளிக்கீற்றுகளாக இந்த இரண்டு நாட்களில் கண்ணுக்கு புலப்படும். ஹாலே வால் நட்சத்திரத்திலிருந்து உருவான துகள்கள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், ஹாலே வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி தடத்தை பூமி கடந்து செல்லும் போது, அந்தச் சிறிய துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிவதால், வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாக தெரிகின்றன. இந்த விண்கற்கள் மிகவும் வேகமாக பயணிக்கும். பூமியின் வளிமண்டலத்துக்குள் சுமார் வினாடிக்கு 40 மைல் (64.37 கிலோமீட்டர்) வேகத்தில் நுழைகின்றன.
50 விண்கற்கள் வரை பார்க்க முடியும்
நிலவு வெளிச்சத்தில் இதனை காண முடியாது என்றாலும், அதிகாலை வேளையில் பிரகாசமான விண்கற்களை காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டெலஸ்கோப் இன்றி சாதாரணமாகவே வெறும் கண்களால் பார்க்க முடியுமாம். வானில் உகந்த சூழல் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 50 விண்கற்கள் வரை பார்க்க முடியும். இந்த ஹாலே வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் இதற்கு முன்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு வந்தது. இனி 2061 ஆம் ஆண்டு வரை இந்த அரிய நிகழ்வானது நடைபெறாது.
மற்றொரு அதிசய நிகழ்வு
இதுபோக மே 18 ஆம் தேதி ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்குத் திசையை நோக்கி பாருங்கள். அப்போது பிறை நிலவு, பூமியில் இருந்து தென்படும் மிகப் பிரகாசமான கோளான வெள்ளிக்கு அருகில் தோன்றும்.

அதிக பிரகாசமான இந்த வெள்ளி கிரகம் மாலை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வானில் இவை இரண்டும் நெருக்கமாக இருப்பது போல தோன்றினாலும், உண்மையில் இந்த இரண்டு கோள்களுக்கு இடையே கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications