ரெடியான ப்ளூ பிரிண்ட்.. எப்போ என்ன செய்யணும்? விஜயை மொத்தமாக கண்ட்ரோல் எடுக்கும் டெல்லி? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முக்கியமான சில ஆலோசனைகளை வழங்கி வருவதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். கட்சி தொடங்கி 1 வருடத்தில்.. விஜய்க்கு முக்கியமான இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. அந்த இரண்டு சிக்கல்கள் என்னென்ன என்று பார்க்கலாம். அந்த சிக்கல் மூலம் விஜய்க்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை டெல்லி வழங்கி உள்ளது என்றும் பார்ப்போம்.

TVK Vijay

சிக்கல் 1

விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விஜய்க்குத்தான் சிக்கல். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மிக லேட்டாக கூட்டத்திற்கு வந்தது. அதோடு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்று சில இடங்களில் காத்திருந்தார். அதன்பின் போலீஸ் சொன்ன அறிவுரைகளை கேட்கவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் நிர்வாகிகள் பரப்பிய வதந்திகளை கட்டுப்படுத்தவில்லை. விஜய் அமைதியை தூண்ட வேண்டும் என்று நினைக்காமல் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற திட்டம் இருப்பது போல வீடியோ போட்டார். இதெல்லாம் கோர்ட்டில் அவருக்கு கடுமையாக எதிராக திரும்பும்.

சிக்கல் 2

விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது. நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு எதிராக உள்ளது.

விஜய்க்கு டெல்லி ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முக்கியமான சில ஆலோசனைகளை வழங்கி வருவதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நீங்கள் மேற்கண்ட வழக்குகளை பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்.

உங்களை வழிநடத்தும் நபர்களுக்கு அரசியல் அறிவு போதவில்லை. எப்போது எப்படி பேச வேண்டும். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு போதிய அறிவு இல்லை. இனி அதை பார்த்துக்கொள்கிறோம். கவலை வேண்டாம். உங்களுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும். என்ன பேச வேண்டும் என்று நாங்கள் ப்ளூ பிரிண்ட் கொடுக்கிறோம். கவலைப்பட வேண்டாம்.

விஜய்க்கு ஆதரவாக வரும் பாஜக

கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக விஜய்க்கு 50+ இடங்களை கொடுக்க பாஜக முடிவெடுத்து உள்ளதாம். தமிழக வெற்றிக் கழகம் - பாஜக - அதிமுக இடையே இந்த கூட்டணி அமைக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவிற்கு முதல்வர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள்.. வழக்குகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று விஜயிடம் டெல்லி தரப்பு கூறி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அடுத்து என்ன முடிவுகளை எடுக்கலாம் என்று விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+