“ஒத்த செருப்பு”-ஐ வைத்து பார்த்திபனை மடக்கிய ப்ளூ சட்டை - 14 கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தல்
சென்னை: இரவின் நிழல் திரைப்படம் தொடர்பாக விமர்சகர் புளூ சட்டை மாறனுக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கும் இடையே வார்த்தைபோர் முற்றியுள்ள நிலையில் பார்த்திபனிடம் 14 கேள்விகளை எழுப்பி இருக்கிறார் புளூ சட்டை மாறன்.
அதில், அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, அறிவுஜீவி, இடியட் என்று நக்கல் அடித்து பயனில்லை. உருப்படியான பதில் மட்டுமே இங்கு மதிக்கப்படும். ஏற்கனவே தனித்தனியாய் கேள்வி எழுப்பியும் எந்த பதிலும் பளிச்சென்று வரவில்லை.
சோஷியல் மீடியாவில் யாரோ எழுதியதை ஆதாரம் என்கிறீர்கள். ஆகவே இதோ முழு கேள்வித்தொகுப்பு. இக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஈயம் பூசாமல் பதில் சொல்லுங்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

1. உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமென இரவின் நிழல் ப்ரமோஷன்களில் கூறுகிறீர்கள். உலகின் முதல் என்றால். அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பாதது ஏன்? அல்லது அனுப்பியும் அவர்கள் ரிஜெக்ட் செய்து விட்டார்களா?
2.1905 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை உலகத்தினர் பலரால் படிக்கப்பட்டு வரும் வெரைட்டி சினிமா இதழில், Fish and Cat 2013 ஈரானிய படம் நான் லீனியரில் கதை சொல்கிறது என்று தெளிவாக எழுதிய ஆதாரத்தை தந்தும்.. அதைப்பற்றி இதுவரை வாய் திறக்காமல்... சமூக வலைத்தளத்தில் யாரோ சிலர் எழுதியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து 'Fish and Cat' நான் லீனியர் படமில்லை' என்று மடைமாற்றுவது ஏன்?
3. Fish and Cat படத்தில் காட்சிகள் லீனியரில் இருந்தாலும்... வாய்ஸ் ஓவரில் நான் லீனியராக கதை செல்வதாக ஒரு ட்வீட் ஆதாரத்தை தந்தீர்கள்.
4. சரி.. உங்கள் விருப்பத்திற்கே வருவோம். நான் லீனியரில் கதை சொன்னாலும் அது நான் லீனியர் படம்தானே? அதிலென்ன உங்களுக்கு குழப்பம்?
5.நீங்கள் நடித்த ஒத்த செருப்பு படத்தை ஒரே நபர் நடித்த முதல் (தமிழ்) படம் என்று ஓயாமல் ப்ரமோட் செய்தீர்களே? அதில் நீங்கள் மட்டுமா நடித்தீர்கள்? பலரது குரலும் ஒலித்தது அல்லவா?
6.குரலும் நடிப்பின் ஒரு பிரிவுதானே? அப்படியெனில் ஒத்த செருப்பு என்பது எப்படி ஒருவர் மட்டும் நடித்தது என்றாகும்?
7. இதைத்தானே Fish and Cat படத்திலும் செய்தார்கள்? உங்களுக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
8. ஒத்த செருப்பு படம் வெளியான ஆண்டு 2019. ஆனால் 2015 ஆம் ஆண்டே தனி நபர் நடித்து, எழுதி, இயக்கி. தயாரித்த முதல் தமிழ்ப் படமான கர்மா வெளியாகிவிட்டது என்றும், அதுகுறித்து உங்களுக்கு நன்கு தெரியும் என்றும் அதன் இயக்குனர் அரவிந்த் கூறியுள்ளாரே. அதற்கு உங்கள் நேர்மையான பதில் என்ன?
9. சிங்கிள் ஷாட் படத்திற்கான கின்னஸ் விருதை 2012 ஆம் ஆண்டு பெற்று, 2013 இல் தியேட்டர்களில் வெளியான படம் அகடம். அதன் இயக்குனர் முகம்மது இசாக். ஒளிப்பதிவாளர் நவுஷத்.
10.இரவின் நிழல் கதை, ஷூட்டிங் ஆரம்பித்தது முதல் இன்று நீங்கள் World's First Single Shot Non linear என் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கும்வரை.. அகடம் படம் பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா?
11. இதுகுறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காமல் இருப்பது ஏன்?
12. ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்களில் இருப்பது போல ஆஸ்கார் வின்னர்கள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் அகடம் மற்றும் கர்மாவில் பணியாற்றவில்லை. சிறிய பட்ஜெட்டில்... புதியவர்கள் செய்த சாதனைகள் அவை.
13.பலரது பிறந்தநாள் மற்றும் திருமண நாள்களுக்கு வித்யாசமான பரிசுகளை அளிக்கும் நீங்கள்.. இவர்களை அழைத்து இன்றுவரை கௌரவிக்காதது ஏன்?
14.அவர்களின் புகழ் வெளியே தெரிந்து விடும். உமது குட்டு வெளிப்பட்டு விடும் எனும் பதட்டமா?
இதில் அனைத்து கேள்விகளுக்கும் ஒன்று விடாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பதில் தாருங்கள். முடியாவிட்டால் ஒரு கேள்விக்காவது மழுப்பாமல் பதில் தாருங்கள். 24 மணிநேரமும் கஷ்டப்பட்டு உழைத்தேன், தமிழனுக்கு தமிழனே எதிரி, எனக்கு முன்பே எதுவும் தெரியாது என்பதை பலமுறை கூறிவிட்டீர்கள். போதும். நேரடியான பதில்களை தந்தால் நன்று. அறிவு ஜீவியும், ஒயிட் காலர் நடிகருமான பார்த்திபனின் பதிலுக்கு தமிழக சினிமா ரசிகர்களை போல காத்திருக்கும் ப்ளூ காலர் விமர்சகன். Without the Gun." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications