2026ல் கமல், விஜய்யை நம்பினால் ரசிகர்களுக்கு இருட்டுக்கடை அல்வாதான்! என்ன சொல்கிறார் ப்ளூசட்டை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் இவர்களை எல்லாம் நம்பினால் கடைசியில் இருட்டுக்கடை அல்வாதான் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நம்மவர்: ஊழலை ஒழிக்க டார்ச் லைட்டுடன் வந்தார். ரிமோட்டை உடைத்தார். பிறகு பட வியாபாரத்திற்காக சிகப்பு பூதத்துடன் கை கோர்த்தார்.

tamil nadu assembly election 2026 blue sattai maran 2026

கடைசியில் சூரியனுடன் ஐக்கியமாகி.. இப்போது ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கிறார்.

தலீவர்: சிஸ்டம் சரியில்லை. ஆன்மீக அரசியல் மூலம் தமிழகத்தை மீட்பேன் என்று துள்ளினார். பிறகு யூடர்ன் அடித்து பழையபடி ஷூட்டிங் சென்றுவிட்டார்.

தற்போது தமிழக அரசியலின் கிங் மேக்கராக தன்னை உணர்ந்து.. கொல்லைப்புற அரசியல் செய்கிறார்.

2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுகமாக உதவுவார்.

சங்கிமான்: தமிழ்ப்பற்று முகமூடியை அணிந்து கொண்டு அக்மார்க் B டீம் அவதாரம் எடுத்துள்ளார். எப்போதோ எடுத்தும் விட்டார்.

சில வருடங்கள் கழித்து.. பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகலாம் அல்லது அக்கட்சியின் மாநிலத்தலைவராக கூட ஆகலாம்.

சுறா: வந்தா மலை. போனா முடி என களத்திற்கு வந்துள்ளார். ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார்.

தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது.

ஆக மொத்தத்தில்.. இவர்கள் அனைவருமே செமத்தியாக செட்டில் ஆகத்தான் இத்தனை நாடகங்களும்.

இவர்களை நம்பி நேரம், பணம், எதிர்காலத்தை இழக்கும் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பட்டை நாமம் உறுதி.

சந்தேகம் இருந்தால் நம்மவர் மற்றும் தலீவரின் பக்தர்களுக்கு நேர்ந்த கதியை யோசித்து பாருங்கள்.

இவர்கள்..திமுக, அதிமுகவை ஒழித்து.. நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என நம்பும் அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்போவது..

இருட்டுக்கடை அல்வாதான். இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அடுத்ததாக விஜய்யின் தவெகவும் களம் காண்கிறது. இதனால் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தனது கட்சி மதவாத, ஊழல்வாத, பிளவுவாத அரசியலுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். அவர் யாருடனாவது கூட்டணி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்வோம் என்றுதான் விஜய் கூறியுள்ளார். அது போல் கூட்டணி ஆட்சிக்கும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருடைய அரசியல் முன்னெடுப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. அவரும் பாஜகவின் பி டீம் என்கிறார்கள். மேலும் அவர் அறிக்கையிலேயே அரசியல் செய்வதாகவும் பொதுமக்களை இதுவரை எந்த விவகாரத்திற்கும் சந்தித்ததில்லை என கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் பரந்தூரில் போராட்டம் நடத்துவோரை பார்க்க விஜய் அனுமதி கேட்டு கடிதம் கொடுதத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களோடு மக்களாக இணக்கமாக இருந்தால் மட்டுமே அரசியலில் சோபிக்க முடியும் என விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன.

ஆனால் விஜய் கட்சியினரோ , "தங்கள் தலைவர் எப்போது வெளியே வருவார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்" என்கிறார்கள். அது போல் ஆழம் பார்ப்பதற்காக லோக்சபா தேர்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களிலும் விஜய் கட்சி போட்டியிடவில்லை.

ஒரு வேளை போட்டியிருந்தால் அவரது கட்சிக்கான செல்வாக்கு தெரியவந்திருக்கும். ஆனால் அதை விஜய் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+