அண்ணனின் டிசைன்.. விஜய் குறித்து சீமான் பேசியதை கிண்டல் செய்து ப்ளூசட்டை மாறன் போட்ட லிஸ்ட்
சென்னை: விஜய் சென்றதால் தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால் அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை.. திரைப்படத்தின் வசனம் போல் வீடியோவில் பேசியிருக்கிறார். கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்றால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாது எப்படி என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், விஜய் குறித்து சீமான இதுவரை பேசியதை லிஸ்ட் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து சீமான இதுவரை பேசிய பல்வேறு விஷயங்கள், இனிமேல் பேசப்போகும் விஷயங்கள் என்று கூறி கிண்டல் செய்து ப்ளூசட்டை மாறன் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.

அண்ணனின் டிசைன்:
அன்று..
* விஜய் என் தம்பி. பச்சைத்தமிழன். அவனுக்காக நான் எப்பவும் துணையா இருப்பேன்.
* நடுவுல நின்னா லாரில அடிபட்டு சாவ.
* கோவத்துல பேசுனாலும்.. என் தம்பியை திட்டுறது தப்பில்ல.
* கூமுட்டை கொள்கை. மோதிப்பாருடா.
* தவெகல இருக்கற எல்லாரும் என் தம்பி, தங்கைகள்.
* அணில் குஞ்சுகள் புலியோட மோதுது.
* கரூர்ல நடந்த சம்பவம் தம்பி மனசை பாதிச்சிருக்கும். பாவம். அதனால பாதிக்கப்பட்ட மக்களை அவர் இன்னும் சந்திக்கல. இதை குறையா சொல்ல வேணாம். தம்பி வரலன்னா? அண்ணன் நான் ஆறுதல் சொல்ல வந்துருக்கேன்.
இன்று:
* சினிமா வசனம் பேசுகிறார் விஜய்.
நாளை:
* என் தம்பி பேசுனது சரிதான்.
நாளை மறுநாள்:
* உனக்கு எதுக்குடா அரசியல்? கட்சியை கலச்சிட்டு போ.
அடுத்த வாரம்:
* திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளனும்னு பட்டா போட்டு தந்துருக்கா? என் தம்பி அரசியலுக்கு வந்தா என்ன தப்பு?
* அடுத்த மாதம்:
நடிக்கிற வேலையை மட்டும் பாரு. அரசியல் ஒரு நெருப்பு ஆட்டம். அதை நான் பாத்துக்கறேன்.
ஜனவரி 2026:
* தவெக தம்பி, தங்கைகள் எல்லாம் மாற்று அரசியலை முன்னெடுப்பாங்க. ஒரு அண்ணனா நான் கூட நிப்பேன்.
மே 2026:
* பரீட்சை லீவுல மைதானத்துல விளையாட போகாம.. அரசியல் விளையாட்டு எதுக்கு? ஓரமா போங்கடா. வெறியாகிடுவேன்." இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications