”என்ன ப்ரோ.. உங்க அரசியல் இப்படி இருக்கு?” விஜய்யை விட்டு விளாசிய ப்ளு சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலை சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் மீடியாவை சந்தித்து பேட்டி தருகிறார்கள். வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால் த.வெ.க. தலைவர் பேட்டியும் தரவில்லை. போராடவும் இல்லை. வழக்கம்போல சம்பிரதாய அறிக்கை மட்டுமே வருகிறது என்று ப்ளூ சட்டை மாறன் விஜய்யை விமர்சித்துள்ளார். மேலும், என்ன ப்ரோ.. உங்க அரசியல் இப்படி இருக்கு? என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். ஆளும் திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய், அவ்வப்போது தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார். அண்மையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை விஜய் பனையூர் இல்லத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

vijay blue shirt maran chennai

அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ஃபெஞ்சல் புயல் பாதித்த இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண பணிகளை செய்தனர். இருப்பினும் விஜய் அரசியலுக்கு வந்த பல மாதங்கள் ஆகியும் இன்னும் மக்களை சந்திக்கவில்லை என்றும் வெறும் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டது.

ஃபெஞ்சல் புயலால் பாதித்தவர்களை நேரில் சென்று சந்திக்காமல், வீட்டுக்கு அழைத்து நலத்திட்ட உதவிகளை செய்தததை திமுகவினர் விமர்சித்து வந்தனர். இதேபோல் மக்களை சந்திக்காமல், செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் அரசியல் செய்வதையும் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவாரம் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை விஜய் சந்தித்தார்.

ஆளுநரை சந்திக்க செல்லும் போது அறிக்கை மற்றும் செய்தியாளர்களை சந்திக்காததையும், மற்ற கட்சிகள் போராட்டம் செய்து வருகிறது, செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை, தவெக போராடவில்லை வெறும் சம்பிரதாய அறிக்கை மட்டுமே விடுவதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலை சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் மீடியாவை சந்தித்து பேட்டி தருகிறார்கள். வீதிக்கு வந்து போராடுகிறார்கள். த.வெ.க.தலைவர் பேட்டியும் தரவில்லை. போராடவும் இல்லை. வழக்கம்போல சம்பிரதாய அறிக்கை மட்டுமே வருகிறது.

இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறாராம். ஏற்கனவே உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதற்கென மூன்று பெண் காவல் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது. இதன்பிறகு இவர் மனு அளிப்பதால் என்ன நடக்குமென நினைக்கிறார்? என்ன ப்ரோ.. உங்க அரசியல் இப்படி இருக்கு? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக ஒரு ட்வீட்டில், “கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினால்... கூட்டம் கூடிரும். அதான? சரி. வழக்கம்போல பனையூர் ஆபீஸில் ஃபோட்டோ வைத்து அஞ்சலி செய்தால்? வேணாம். மீம் போடுவாங்க.சரி. அட்லீஸ்ட் ஒரு ட்வீட் கூட போடாதது ஏன்? யாருக்காவது காரணம் தெரியுமா? என்று பதிவிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+