சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு மர்மபோன் ஒன்று வந்தது. வாலிபர் ஒருவர் செல் போனில் பேசினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு அந்த வாலிபர் போனை துண்டித்து விட்டார்.
இதுபற்றி உடனடியாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். நேற்று இரவில் தொடங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நீடித்தது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுத்த வாலிபர் செல்போனில் இருந்து பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
பெரியமேட்டை சேர்ந்த யுவராஜ் என்ற வாலிபரின் செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. யுவராஜை பிடித்து எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது யுவராஜ் எழும்பூரில் எனது செல்போன் காணாமல் போய்விட்டது. அதனை நான் தொலைத்து விட்டேன் என்று கூறியுள்ளார். எனவே இந்த செல்போனை எடுத்து வேறு யாராவது மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செல்போனைத் திருடியது யார் என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications