ஓவியா உதயநிதி என்ற இமெயில் ஐ.டியில் இருந்த வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அலறிய சென்னை தனியார் பள்ளிகள்!
சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் வித்யா மந்திர், பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து விடும் என்றும் இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து வந்த போலீசார், பள்ளி வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
மொகரம் பண்டிகை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அது புரளி என தெரியவந்துள்ளது.
மின்னஞ்சலில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓவியா உதயநிதி என்ற பெயரிலான மின்னஞ்சல் முகவரி மூலமாக அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும், சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல கடந்த ஜூன் மாதமும் மாங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் யார் என இதுவரை கண்டறியப்படாத நிலையில், மீண்டும் மீண்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications