அதிகாலையில் வந்த மர்ம கால்.. முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நேரம். இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்கள் எல்லோருக்கும் இப்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

போன் வந்தது
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கால் செய்து இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சென்னை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக முதல்வரின் இல்லத்திற்கு சென்றனர்.

சோதனை நடந்தது
இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டின் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதேபோல் முதல்வரின் கார்கள், வீட்டின் பின்புறம், அருகாமையில் இருக்கும் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். மோப்ப நாயின் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.

இல்லை என்று கண்டுபிடிப்பு
சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மிரட்டல் வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வலைவீச்சு
தற்போது இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார். அவர் செய்த போன் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள். இவரின் பின்புலம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று தமிழக போலீஸ் கூறியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications