சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இரவு போன் அழைப்பு வந்தது. அதில் 'நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்' என்று எதிர்முனையில் பேசியவர் கூறியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தின் 8 மாடிகளிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது அது புரளி என்பது தெரியவந்தது.

சென்னை மாநகர காவல் ஆணையரகக் கட்டிடம், சென்னை வேப்பேரியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 9 மாடிக் கட்டிடமாக இருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் மண்டபம், பாஸ்போர்ட் சரிபார்ப்பு மண்டலம் மற்றும் வரவேற்பு பகுதி ஆகியவை அமைந்துள்ளன,. சைபர் கிரைம் ஆய்வகத்துடன், நகர காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அதன் 17 துறைகளுடன், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் அமைந்துள்ளன.

Chennai Police

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் காவல்துறை துணை ஆணையர்கள் பணியாற்றும் நகர காவல்துறையின் பல்வேறு நிர்வாகப் பிரிவுகள் இருக்கின்றன. நகரத்தில் தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணித்து சமாளிக்க, நகர புலனாய்வுப் பிரிவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் மத்திய குற்றப் பிரிவின் சிறப்புப் பணியாளர்களைக் கொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ATC) ஐந்தாவது மாடியில் இருக்கிறது. ஆறாவது மாடியில் நகர காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு உள்ளது. ஏழாவது மாடியில் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான உதவி மையத்துடன் கூடிய மற்றொரு கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ளது. மேல் தளத்தில் ஆணையர் மற்றும் நான்கு கூடுதல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர் (உளவுத்துறை) ஆகியோரின் அறைகள் உள்ளன.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை பொறுத்தவரை ஏராளமான போலீசார் எந்த நேரமும் வந்து செல்லும் இடம் மட்டுமல்ல.. மிகவும் பரபரப்பான அலுவலகம் ஆகும். இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பார்கள். அந்த புகாரை விசாரித்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். சில புகார்களை நேரடியாக கமிஷனரே விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.

இந்நிலையில் ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இரவு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், "நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் ஆணையரகத்தில் உள்ள பாதுகாப்பு போலீஸார், உடனடியாக மிரட்டல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வேப்பேரி காவல் நிலைய போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தின் 8 மாடிகளிலும் சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.

எனவே, வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் வதந்தி பரப்பியது உறுதியானது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து மிரட்டல் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வேப்பேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+