அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மெயிலில் வந்த மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.. ஒரே பரபரப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சளில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தாம்பரம் போலீசார், 6 வெடிகுண்டு நிபுணர்கள் குழு காலை 8 மணி முதல் கல்லூரியில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று காலையில் ஒரு மின்னஞ்சள் வந்தது. இதில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்து. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை எம்ஐடி கல்லூரிக்கு 6 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு விரைந்தனர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து அனைத்து இடங்களிலும் சோதனை செய்து வருகிறார்கள். ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் அங்கு தீவிர சோதனை நடந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மெயிலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் எங்கிருந்து வந்தது?, வெடிகுண்டு வைத்திருப்பது உண்மை தானா? இல்லை புரளியா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னையில் ஏற்கனவே பல கல்லூரிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதும், சோதனையில் அது புரளி என்றும் தெரியவந்திருக்கிறது.
எனவே தற்போது வந்துள்ள மெயிலும் வெடிகுண்டு புரளியாகத்தான் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் ஒருபுறம் வெடிகுண்டு சோதனையும் அந்த கல்லூரி முழுவதும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications