பாம் வெடிக்கும்.. 20 நாடுகளின் துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காலையிலேயே பரபரப்பான சென்னை!
சென்னை: சென்னை நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க துாதரகம் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணை தூதரகங்களுக்கு இ-மெயில் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சலில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஜப்பான், சிங்கப்பூர், வங்கதேசம், அயர்லாந்து, மலேசியா, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளின் துணை துாதரகங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், ஆயிரம் விளக்கு காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க தூதரகத்துக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், திடீர் வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம் நிலவியது.
வெடிகுண்டு மிரட்டல்
அதுமட்டுமல்லாது, ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மோப்ப நாய் உதவியுடன் முழுமையான சோதனைகளை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையிலும் எந்த வகையான வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மின்னஞ்சலில் மிரட்டல்
இதனால் அந்த மின்னஞ்சல் ஒரு வதந்தி அல்லது வெற்று மிரட்டல் முயற்சியாக இருக்காலம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது, அந்த மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார், அவர் எந்த இடத்தில் இருந்து அனுப்பியுள்ளார் என்பதற்கான விவரங்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். அந்த மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட ஐ.டி. முகவரி மற்றும் நெட்வொர்க் விவரங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ரஜினிகாந்த் வீட்டுக்கு மிரட்டல்
கடந்த சில வாரங்களாகவே சென்னை நகரில் பிரபல நபர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வீடுகளுக்கும் இதேபோல் மின்னஞ்சல் வழியாக மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அண்ணா அறிவாலயம், ஆளுநர் மாளிகை, நடிகை குஷ்பு வீடு, நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருந்தன.
வெடிகுண்டு வதந்தி
அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையிலும் எந்தவித வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தொடர்ச்சியான மின்னஞ்சல் மிரட்டல்களுக்கு பின்னால் ஒரே நபர் செயல்படுகிறாரா, அல்லது குழுவாக திட்டமிட்டு செயற்படுகிறார்களா என்பதையும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக துாதரகங்கள், முக்கிய அலுவலகங்கள், மற்றும் பிரபலங்களின் வீடுகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications