சென்னை எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஆளுநர் மாளிகை, எஸ்வி சேகர் வீட்டுக்கும் மிரட்டல்
சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் (Bomb threat) விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நடிகர் எஸ். வி. சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணைconduct செய்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் ஒரு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து உஷாரான போலீசார் உடனடியாக சென்னை ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை நடத்தினர். இதேபோன்று எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதனால் டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இதேபோன்று நடிகர் எஸ். வி. சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணைconduct செய்து வருகிறார்கள். தொடர்ந்து அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்த மே மாதம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதேபோன்று சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கும் மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். சோதனையில் இதுவும் புரளி என தெரியவந்தது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications