"ரஜினிகாந்த் வீட்டில் குண்டு வெடிக்கும்"! வெடிகுண்டு மிரட்டலால் போயஸ் தோட்டத்தில் பரபரப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. அது போல் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகே ரஜினிகாந்தின் வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும் குண்டு வெடிக்கும் என்றும் இமெயில் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் சென்று அங்கு சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.

அதுபோல் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.
அது போல் இன்று காலை சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமான அபிராமபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல் அமைச்சர் சேகர்பாபு வீடு, சின்மயி வீடுகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக எஸ்.வி.சேகர் வீடு, முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகைகள் ஸ்வர்ணமால்யா வீடு, த்ரிஷா வீடு, விஜய் வீடு, தவெக அலுவலகம் ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு போய் தேடிய போது அது புரளி என தெரியவந்தது.
இந்த சோதனையில் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செயத் மின்னஞ்சல் முகவரியை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.வி.சேகரின் வீட்டிற்கு 7 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் கடந்த வாரம் அண்ணா அறிவாலயம், நடிகர் அருண் விஜய் வீடு உள்ளிட்ட வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications