புத்தக கொள்முதல் முறைகேடு: கமிட்டியில் இடம்பெற்றிருந்த 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்.. தமிழக அரசு ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய பெயர்களில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

Book Purchase Scam Row Action Taken Against 5 Library Officials

இதேபோல், மதுரை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து பொது நூலகத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் காமாட்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக பொறுப்பு தலைமை நூலகர் தினேஷ் குமார், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அதிகாரி சந்தானகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அதிகாரி சந்தான கார்த்திகேயன், பொது நூலக தலைமை கணக்கு அலுவலர் ஜூலியட் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 பேரும் புத்தக கொள்முதல் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+