மதியம் 1.50 மணிக்கு வெடிக்கும்.. டிஷ்யூ பேப்பரால் சென்னை இண்டிகோ விமானத்தில் பதறிய 192 பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 'இண்டிகோ' விமானத்தின் கழிவறை கண்ணாடியில் 'மதியம் 1.50 மணிக்கு வெடிக்கும்' என டிஷ்யூ பேப்பரில் எழுதி ஒட்டிவைத்த சம்பவத்தால் 192 பயணிகள் பதற்றமடைந்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

boom-1-50-pm-chennai-bound-indigo-flight-mid-air-bomb-scare-after-tissue-paper-message-stick-on-lav

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான இன்று மதியம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. விமானத்தில் மொத்தம் 192 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் சென்னை விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள கண்ணாடியில் டிஷ்யூ பேப்பர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த டிஷ்யூ பேப்பரில் ஆங்கிலத்தில் 'BOOM 1.50PM' என எழுதப்பட்டு இருந்தது. இதன் அர்த்தம் 'மதியம் 1.50 மணிக்கு வெடிக்கும்' என்பதாகும். இதனை விமான பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி இது விமானத்திற்கான வெடிகுண்டு மிரட்டலாக கருதப்பட்டது.

உடனடியாக பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு சம்பவம் பற்றி தெரிவித்த பைலட் உடனடியாக தரையிறங்க அனுமதி கோரினார். சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இண்டிகோ விமானம் தனி இடத்தில் பத்திரமாக தரையிறங்கியதுது.

மதியம் 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் முதலில் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர். மோப்பாநாயும் விமானத்தில் மோப்பம் பிடித்தது.

சுமார் ஒரு மணிநேரம் தேடுதல் வேட்டை நடந்தது. விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லாதததும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பயணிகளின் உடைமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+