லிப் சர்வீஸ்.. உங்க அம்மா தான் கத்து கொடுத்தாங்க! தமிழக காங்கிரஸ் பிரமுகருக்கு குஷ்பு சுளீர் பதிலடி
சென்னை: லிப் சர்வீஸை உங்க அம்மா தான் கற்று கொடுத்தாங்க என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர் விஜய் தனசேகருக்கு பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு பதிலளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். அங்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். வயநாட்டில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு பிரியங்கா காந்தி தனது அண்ணன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்பட மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அறைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்பட மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தியுடன் சென்று அமர்ந்தனர். ஆனால் பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்த போது, அதிகாரியின் அறைக்குள் சோனியா காந்தி குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், மல்லிகார்ஜூன கார்கே வெளியே அனுப்பப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
அதுமட்டுமின்றி மல்லிகார்ஜூன கார்கே கதவின் அருகே நின்று உள்ளே பார்க்கும்படியான வீடியோவையும் பாஜக வெளியிட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்தது. பிரியங்கா காந்தியுடன் முன்வரிசையில் மல்லிகார்ஜூன கார்கே அமர்ந்து இருக்கும் போட்டோவை காங்கிரஸ் கட்சியின் வெளியிட்டு பாஜக பொய் பரப்புவதாக கூறுகின்றன.
இந்நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்கு வெளியே கதவின் பக்கத்தில் மல்லிகார்ஜூன கார்கே நிற்கும் வீடியோவை வெளியிட்டு டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு இருந்தது. அதாவது காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை அவமானப்படுத்தி விட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை குடும்பம் தான் முதலில். அதன்பிறகு தான் கட்சி. இதனால் தான் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது மல்லிகார்ஜூன கார்கேவை வெளியே அனுப்பி உள்ளனர் என்று பாஜக விமர்சனம் செய்ததாக அந்த செய்தி இருந்தது.
டைம்ஸ் நவ் வெளியிட்ட இந்த வீடியோ செய்தி என்பது அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, ‛‛காங்கிரஸ் கட்சி ‛boot Licking' கட்சி என்பதில் எந்த அதிசயமும் இல்லை. சொல்லப்போனால் கார்கே போன்ற மூத்தவர்கள் கூட லிப் சர்வீஸுக்காக தான் இருக்கின்றனர்'' என்று கூறியிருந்தார். அதாவது காங்கிரஸ் கட்சியின் மூத்தவர்களுக்கு மதிப்பு இல்லை. கால் நக்கி பிழைக்கும் கட்சியாக தான் காங்கிரஸ் உள்ளது என்பதை குஷ்பு மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளருமான விஜய் தனசேகர் என்பவர், ‛‛எங்க எங்கே எல்லாம் லிப் சர்வீஸ் நடக்குதுனு மேடம்க்கு தான் நல்லா தெரியுது..'' என்று கூறியிருந்தார். இதையடுத்து விஜய் தனசேகருக்கு, நடிகை குஷ்பு காட்டமாக, ‛‛உங்க அம்மா தான்சொல்லி கொடுத்தாங்க சார்'' என கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவுக்கு தற்போது ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பாஜகரவினர், ‛‛சரியான பதிலடி'' என்று குஷ்புவை பாராட்டி வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ‛‛குஷ்பு மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்தவார். அவர் இன்னொருவரின் அம்மாவை கேவலப்படுத்துவது சரியில்லை'' என விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications