ஸ்டாலின்.. எடப்பாடிதான் இனிமே எல்லாம்.. நேஷனல் லெவல்ல இப்படி மாறிட்டாங்களே.. கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேருமே நேற்று தேசிய அளவில் அதிகம் கவனிக்கப்பட்டனர்.
நேற்று எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். நேற்று நடந்த கூட்டத்தில் 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது I - Indian N - National D - Developmental I - Inclusive A - Alliance. என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் அதிக அளவில் கவனிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்திக்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கை கொடுக்கப்பட்டு இருந்தது. நிகழ்வின் மையத்தில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டு இருந்தன. மற்ற வட இந்திய தலைவர்களுக்கு கூட மேடையின் அடுத்தடுத்து இடங்களில், கடைசியில்தான் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு சோனியாவிற்கு அருகிலேயே இடம் கொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் இன்று கலந்து கொண்ட நிலையில் திமுகவை மட்டும் தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் இன்று கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார். இதனால் தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் கவனிக்கப்பட தொடங்கி உள்ளார். தொடர்ந்து திமுகவை பிரதமர் மோடி எதிர்ப்பதால் ஸ்டாலின் தேசிய அளவில் லைம் லைட்டிற்கு வர தொடங்கி உள்ளது.
எடப்பாடி கவனம்: இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார். நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி அருகிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தேசிய அளவில் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசி உள்ளனர்.
முதலில் அரசல் புரசலாக அதிமுக வலிமை பற்றி எடப்பாடி காதுபட மற்ற கட்சிகள் பேசிக்கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் கூட்டத்தின் போது வெளிப்படையாக 2024 தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறும் மிக முக்கியமானது. அந்த வெற்றி என்டிஏ கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக மீதான இந்த நம்பிக்கையை கேட்டு அதிமுக தலைகள் உச்சி குளிர்ந்ததாக கூறப்படுகிறது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications