கீ-கீ, நிலு நிலு சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் வரிசையில் #BottleCapChallenge.. டுவிட்டரில் டிரென்ட்
Recommended Video
சென்னை: கீ கீ சேலஞ்ச், நிலு நிலு சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் வரிசையில் தற்போது நடிகர்கள் செய்யும் #BottleCapChallenge ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகத்தின் அதீத வளர்ச்சிக்கு பின் ட்ரெண்டிங் என்பது பிரபலமாகிறது. கீ கீ சேலஞ்ச், நிலு நிலு சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ரைஸ் பக்கெட் சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என புதிது புதிதாக சவால்களை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, கஜகஸ்தானை சேர்ந்த தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ சாலஞ்சை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவர் பாட்டிலை பிடித்திருக்க பாட்டிலை பேக்- கிக் (Back - Kick) செய்து அதன் மூடியை திறப்பார்.
இந்த சேலஞ்ச் இணையத்தில் வேகமாக ட்ரெண்டாக, ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோவில் ஒருவரான ஜேஸன் ஸ்டேத்ம் அந்த சேலஞ்சை ஏற்று அவரும் வெளியிட்டார். அவரை தொடர்ந்து பாடகர் ஜான் மேயர், UFC சாம்பியன் மெக் கிரேகர் மற்றும், UFC லைட் வெயிட் சாம்பியன் ஜெரோமி மேக்ஸ் ஹாலோவே, ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்க்ஸ் என பலர் தொடர்ந்தனர்.
இந்த சேலஞ்ச் #BottleCapChallenge என்ற ஹாஷ்டேக்கில் உலகம் முழுவதும் ட்ரெண்டானது.
தற்போது இந்தியாவிலும், ஆக்ஷன் ஸ்டார் அக்ஷய் குமாரும் இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக முடித்து, அதனை தனது ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
அதில் அவர் ஜேஷன் ஸ்டேத்மிடமிருந்து இன்ஸ்பைர் ஆனதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து பலரும் #BottleCapChallenge - ஐ முயற்சி செய்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications