Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்களை அழைத்து உல்லாசமாக இருந்த சிறுமிகள்.. சென்னையில் பலாத்கார வழக்கில் ட்விஸ்ட்! 11 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் இப்போது பெரிய திருப்பம் அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் ரீதியான சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதைக் குறைக்க அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னையில் போக்சோ தொடர்பான புகாரில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

 Boys being intimate with Minor girls with consent arrested by police

பலாத்கார புகார்: சென்னையில் தாம்பரம், தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு, அந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவில் 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தோழியின் உறவினர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த 17 வயது சிறுமியின் தோழியின் குடும்பத்தின் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில், "தாம்பரம் பகுதியில் வசித்து வரும் உறவினர் பெண்ணுக்கு 17 வயதாகிறது. அந்த சிறுமி கடந்த 3 நாள்களாகவே எங்கள் வீட்டில் தான் தங்கியிருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த சிறுமி வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பிய நிலையில், அது குறித்துக் கேட்டோம்.

போலீஸ் விசாரணை: அப்போது அந்த சிறுமி தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வரத் தாமதமானதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த நபர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

மொத்தம் 11 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இருப்பினும், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அதேநேரம், சிறுமி பல காலமாக பாலியல் உறவில் இருந்துள்ளார்.

பெரிய ட்விட்ஸ்ட்: இதனால் குழப்பமடைந்த போலீசார், அந்த சிறுமியிடமே இது குறித்து விசாரித்துள்ளனர். முதலில் தயங்கி அந்த சிறுமி அதன் பிறகு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கூறிவிட்டார். இது தொடர்பாகச் சிறுமி போலீசாரிடம் கூறுகையில், "நான் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டில் தோழியுடன் இருக்கிறேன். நான், எனது உறவினரின் 17 வயது மகள், எனது 18 வயது தோழி என மூவரும் சேர்ந்து இந்தப் பகுதியில் இருக்கும் நண்பர்களை நாங்கள் கால் செய்து அழைப்போம்.

அவர்களுடன் தான் பாலியல் உறவில் ஈடுபடுவோம். கடந்த சில நாட்களாகவும் இதுவே நடந்தது" என தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் மொபைலை ஆய்வு செய்ததில் 16- 22 வயதான 11 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதில் 6 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர் சிறுவர்கள் ஆவர். மொபைலில் இருக்கும் தகவல்களை வைத்து போலீசார் விசாரித்த நிலையில், அவர்கள் 11 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களும் சிறுமிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

என்ன காரணம்: சிறுமிகள் ஒப்புதலுடன் உடலுறவு கொண்டிருந்தாலும் அவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு Age Of Consent எனப்படும் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வமா ஒப்புதல் வயதே காரணமாகும். அதாவது பாலியல் உறவுக்கு இந்த வயதைக் கடந்தவர்கள் சம்மதிப்பது மட்டுமே சட்டப்பூர்வமாகக் கருதப்படும். இந்தியாவில் இது 18ஆக உள்ளது. எனவே, 18 வயது சிறுமிகள் ஒப்புதலுடன் உடலுறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே (statutory rape) கருதப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+