மூளைக்கு சோதனை.. படத்தில் முயல் எங்கே இருக்கு? ஜீனியசால் தான் முடியும்.. 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் "முயல்" எங்கே இருக்கிறது? என்று 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இந்த இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படங்களில் விடைகள் நேரடியாக நாம் பார்க்கும் போது கண்களுக்கு தெரியாது. சற்று கூர்ந்து பார்த்தால் தான் விடை கண்ணுக்கு தெரியும் அல்லது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் தான் விடை கண்ணுக்கு தெரியும்.

அப்படித்தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்ததும் இதில் விடை எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் தான் இந்த படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆம் இந்த படத்தில் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அது தான் இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த படத்தில் ஆமை ஒன்று உள்ளது. மரங்கள் உள்ளன. சிறு சிறு செடிகள் உள்ளன. ஆனால் முயல் இருப்பது போல் தெரியவில்லை. பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் இதில் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது சற்று சவால் நிறைந்ததாக உள்ளது. இப்படி சவால் நிறைந்த இந்த படத்தில் 10 செகண்டில் விடையை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ் தான்.
என்ன போட்டிக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. .. 10.. ஓகே டைம் ஓவர். 10 செகண்டுக்குள் முயலை கண்டுபிடித்து இருந்தால் நீங்க ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் இதுவரை முயல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தால் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று பாருங்கள். ஆப்டிகல் இல்யூசன் படம் மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் உங்கள் மூளையை கசக்கி யோசித்து பாருங்கள்.
அதாவது முன்பு சொன்னது போல, பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். எனவே படத்தை லெப்ட், ரைட் அல்லது தலைகீழாக பார்த்தீர்கள் என்றால் எதாவது ஒரு கோணத்தில் உங்களுக்கு முயல் இருக்கும் இடம் தெரியும். இப்போது 100-க்கு 75 சதவீதம் பேர் சரியாக முயல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மீதம் உள்ள 25 சதவீத பேருக்காக இங்கே ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தில் இடது புறம் உள்ள மரத்தின் கிளைப்பகுதியை மட்டும் உற்று நோக்கி பாருங்கள். அதில் எதாவது உருவம் தெரிகிறதா என்று பாருங்கள். இப்போது ஒரு சிலர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள்.
அப்படியும் தெரியவில்லை என்பவர்கள் படத்தை இடதுபுறமாக திருப்பி வைத்து பாருங்கள். இடதுபுறம் உள்ள மரக்கிளையின் நடுவில் முயல் ஓடுவது போல் தெரியும். அட ஆமா.. என நீங்கள் சொல்வது புரிகிறது. அப்படியும் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும். விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications