99% பேர் பெயில்.. படத்தை நல்லா உற்று பாருங்க.. எந்த எழுத்திற்கு முதலில் அடி விழும்.. 8 செகண்ட் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் புதிர் படத்தில் சக்கரங்கள் இயங்குவதன் மூலம் கீழே உள்ள லெட்டரை கம்பி அடிப்பது போல உள்ளது. சக்கரம் சுற்ற தொடங்கியதும் முதலில் எந்த எழுத்தை கம்பி டச் செய்யும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவிகிதம் பேர் இதை தவறாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்...உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. இத்தகைய படங்களில் விடைகள் நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது. படத்தை பல்வேறு கோணங்களில் பார்த்தால் மட்டுமே இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டறிய முடியும். மேலோட்டமாக பார்த்தால் படத்திற்கான விடை கிடைக்காது.

optical illusion offbeat trend

கானல் நீர் எப்படி தொலைவில் இருந்து பார்த்தால் தண்ணீர் ஓடுவது போன்றும் அருகே சென்று பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லாதது தெரியவருமோ, அதேபோல, படத்தை பார்க்கும் கோணத்தில் தான் விடைகள் கண்ணுக்கு தெரியும். இந்த இல்யூஷன் படங்கள் ஒருவரின் சிந்தனைத் திறன், கவனிப்பு திறன் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அளவுக்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன.

அதாவது, ஒரு விஷயத்தை எவ்வளவு விரைவாக புரிந்து கொள்வார் என்பதைக் கூட இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதை வைத்து மதிப்பிட முடியும் என்று சொல்கிறார்கள்.. மூளைக்கு வேலை வைக்கும் விதமாக சவாலாக இந்த இல்யூஷன் படங்கள் இருப்பதால் நெட்டிசன்களும் ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாக இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

இதனால், தற்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் தனி வரவேற்பு உள்ளது. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று சக்கரங்கள் உள்ளன. ஒன்றை சுற்றினால் மற்றொரு சக்கரம் சுற்றும் விதமாக இந்த சக்கரம் உள்ளது. இயந்திரங்களில் இத்தகைய வடிவமைப்புகளை பார்த்து இருக்கிறோம். பைக், கார் என்ஜின்களில் இத்தகைய பொறியியல் தொழில் நுட்பம் இருக்கும்.

அதேபோன்ற வடிவமைப்பு கொண்ட ஒரு படம் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த படத்தில் மூன்று சக்கரங்கள் உள்ளன. முறுக்கு விசை கொடுப்பதன் மூலம் ஒரு சக்கரத்தில் இருந்து இன்னொரு சக்கரம்.. அதில் இருந்து மற்றொரு சக்கரம் சுற்றும் விதமாக உள்ளது. இப்படி சக்கரம் சுற்றும் போது இயங்கும் கம்பி கீழே உள்ள A-B என்ற எழுத்தில் எதில் முதலில் மோதும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்....1,2,3... ஓகே நேரம் முடிந்தது. படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இயற்பியல் விதிகளை எல்லாம் யோசித்து விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்து பார்த்தும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவரா நீங்கள்..

அந்த அளவு யோசிக்க வேண்டாம்.. கொஞ்சம் நிதானமாக படத்தை உற்று பார்த்து கவனம் செலுத்தினாலே போதும்.. விடையை கண்டுபிடித்து விடலாம்.. படத்திற்கான விடையை B என கண்டுபிடித்து இருந்தால் அது தவறானது. A என்பதே சரியான விடை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+