"தவளை + ஆடு + குதிரை.." மூன்று உயிரினங்களின் மொத்த வெயிட் எவ்வளவு? 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தவளை, ஆடு, குதிரை ஆகிய 3 உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிரினமும் ஒரு குறிப்பிட்ட எடையை பெற்றிருக்கின்றன. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து இந்த 3 விலங்குகளின் மொத்த எடை எவ்வளவு என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் போலவே பிரெயின் டீசர் எனப்படும் புதிர் படங்களுக்கும் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் போது பயனுள்ள வகையிலும் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக இந்த புதிர் படங்கள் இருப்பதால், அதற்கு விடையை கண்டுபிடித்து சிறு வயதில் படித்த கணக்குகளை, நியாபக சக்தியை, தங்கள் திறனை நெட்டிசன்கள் சோதித்துக் கொள்கிறார்கள்..

பல போட்டி தேர்வுகளிலும் இதுபோன்ற புதிர் படங்கள் இடம் பெறுகின்றன. இதனால், இத்தகைய புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் அப் குரூப்களில் பதிவிட்டு வருகிறார்கள்.. அந்த வகையில் இன்று ஒரு புதிர் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கான விடையை கண்டுபிடிப்பது ரொம்பவே ஈசி தான் என்றாலும் பலரும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி வருகின்றனர்.
உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரெயின் டீசர் படத்தில் மொத்தம் மூன்று உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தவளை, செம்மறி ஆடு, குதிரை ஆகிய 3 உயிரினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று உயிரினங்களின் மொத்த எடை எவ்வளவு? என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு ரெடியா?
உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1.. 2.. 3.. .. 10.ஓகே டைம் ஓவர். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து சரியான விடையை கண்டுபிடித்து இருந்தால் நீங்க ஜீனியஸ் தான். ஆனால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று சொல்பவர்கள் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பார்க்கவும். இதன்படி தவளையின் எடையை X என்றும், ஆட்டின் எடையை Y என்றும், குதிரையின் எடையை Z என்றும் வைத்துக்கொள்வோம்.
முதல் படத்தில் தவளை மற்றும் ஆடு எடை என்பது 10 கிலோ என உள்ளது. இதனை (X + Y) = 10 என எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது படத்தில் தவளை மற்றும் குதிரையின் எடை 20 கிலோ என்று உள்ளது. இதனை (X + Z ) = 20 என எடுத்துக்கொள்ளலாம். 3 வது படத்தில் ஆடு மற்றும் குதிரையின் எடை 24 என்று உள்ளது. இதனை (Y + Z) = 24 என எடுத்துக்கொள்ளலாம். இப்போது இந்த 3 படங்களையும் கூட்டல் செய்யவும்.
இதன்படி நமக்கு (X + Y) + (X + Z ) + (Y+Z) = 10 + 20 + 24 என்ற சமன்பாடு கிடைக்கும். இதனை சுருக்கினால், 2 X + 2 Y + 2Z = 54 என்று கிடக்கும். இதனை மேலும் சுருக்கினால் 2 (X+Y+Z) = 54 என்று கிடைக்கும். இதனை மேலும் சுருக்கினால், (X+Y+Z) = 54/2 = 27 என்று கிடைக்கும். இப்போது படத்திற்கான விடை அதாவது தவளை + ஆடு + குதிரை ஆகிய 3 உயிரினங்களின் கூடுதல் 27 கிலோ என்று நமக்கு கிடைக்கும். இதுவே படத்திற்கான விடையும் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications