பிரிக்ஸ் மாநாடு நடத்தி என்ன பிரயோஜனம்? பணவீக்கம் குறித்து வெளியான ஷாக் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடத்தியதன் மூலம், சர்வதேச அளவில் இந்தியா தன்னை கெத்தாக காட்டிக்கொண்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், நாட்டின் பணவீக்கம் கடந்த மாதத்தை விட இந்த மாதம் உயர்ந்திருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இப்படி இருக்கையில் பிரிக்ஸ் மாநாடு நடத்தி என்ன பிரயோஜனம் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

நாட்டின் மொத்த பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.78% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 9.92% ஆக அதிகரித்திருக்கிறது. இது ராய்ட்டர்ஸ் நடத்திய கணிப்பில் எதிர்பார்க்கப்பட்ட 9.89% என்கிற அளவைவிட சற்று அதிகமாகும். தற்போது நாட்டின் மொத்த பணவீக்கம் தொடர்ந்து 4வது மாதமாக 10%க்கு நெருக்கமாக நீடிக்கிறது.

India s inflation

எரிபொருள் மற்றும் மின்சாரத்துறையின் பணவீக்கம் ஜூலையில் 20.05% இருந்தது. இது ஆகஸ்டில், 22.93% என்று கடுமையாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 34.41% அதிகரித்துள்ளது பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இது தவிர உணவு பொருட்களின் விலையும் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது.

உணவு பணவீக்கமானது, 6.65% ஆக இருந்து 7.05% ஆக அதிகரித்திருக்கிறது. சீரறற் பருவமழை காரணமாக சர்க்கரை, தானியங்கள், பால், சமையல் எண்ணெய், முட்டை மற்றும் இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம். ஆகஸ்ட் மாதத்தில் சர்க்கரை விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல உற்பத்தி துறையின் பணவீக்கம் ஜூலை மாதத்தின் 8.29% லிருந்து, சற்றே உயர்ந்து 8.37% எனகிற அளவில் இருக்கிறது.

நுகர்வோர் விலை பணவீக்கமும்,உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வாகல் ஆகஸ்ட் மாதத்தில் 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பரவலாக அதிகரித்ததால், வரவிருக்கும் காலாண்டுகளில் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஜாடை மாடையாக தெரிவித்து வருகிறது. இருப்பினும் நடப்பு ஆண்டில் உடனடியாக வட்டி விகித உயர்வு இருக்குமா? என்பது டவுட்டுதான்.

வட்டியை உயர்த்தினால்.. வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் ஆகியவை காஸ்ட்லியாக இருக்கும். எனவே மக்கள் அவசியமின்றி கடன் வாங்குவதை குறைத்துக்கொள்வார்கள். இது பணப்புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விலைவாசி குறையும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+