திருவள்ளூரில் ஆசை ஆசையாக இருந்த மாப்பிள்ளை.. கல்யாண கோலத்தில் இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண நாளில் அல்லது கடைசி நேரத்தில் பெண்கள் திருமணத்தை கடைசி நேரத்தில் நிராகரிப்பது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல குடும்பங்களில் பெண்ணின் முழுச் சம்மதம் இல்லாமல், பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் நிச்சயம் நடக்கிறது. ஆரம்பத்தில் குடும்பச் சூழலுக்குப் பயந்து சம்மதிக்கும் பெண்கள், தாலி கட்டும் கடைசி தருணத்தில் தங்கள் எதிர்காலத்தைக் நினைத்து பயந்து எதிர்க்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோர் திருமண நிச்சயார்த்தம் செய்ய திட்டமிட்டனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலையில் முகூர்த்த ஏற்பாடுக விறுவிறுப்பாக நடந்துள்ளது.

Bride makes a phone call just as the Thali is about to be tied in Thiruvallur A twist

அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த மணப்பெண்ணை தட்டி எழுப்பி உள்ளார்கள். அவர்கள் மணப்பெண்ணை திருமணத்திற்கு தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம், எனவும் மணவறைக்கு வரமாட்டேன். தாலி கட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்கள்.

இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் மணப்பெண் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மீஞ்சூர் போலீசார், பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். மணப்பெண் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார்.

பின்னர் பெற்றோர் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். தனியாக இருந்த மணப்பெண்ணை போலீசார் பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.

திருமணம் நின்றதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டும் விட்டது. மணப்பெண் வேறு யாராவது நபரை காதலிக்கிறாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே பிரச்சினையா என்று மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமண நாளில் அல்லது கடைசி நேரத்தில் பெண்கள் திருமணத்தை கடைசி நேரத்தில் நிராகரிப்பது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல குடும்பங்களில் பெண்ணின் முழுச் சம்மதம் இல்லாமல், பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் நிச்சயம் நடக்கிறது. ஆரம்பத்தில் குடும்பச் சூழலுக்குப் பயந்து சம்மதிக்கும் பெண்கள், தாலி கட்டும் கடைசி தருணத்தில் தங்கள் எதிர்காலத்தைக் நினைத்து பயந்து எதிர்க்கிறார்கள். அதேபோல் வேலை, லைப் ஸ்டைல், மணமகன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளால் மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்தி விடுகிறார். இப்படித்தான் மீஞ்சூரில் நடந்துள்ளது. கடைசி நேரத்தில் மாப்பிள்ளைகள் ஏமாறுவது அதிகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+