சென்னை டூ பெங்களூர் மட்டுமா.. இன்னும் 2 இருக்கே.. சென்னையை அடியோடு மாற்ற போகும் 3 புது ரூட்கள்!
சென்னை: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே உள்ளிட்ட முக்கியமான பல சாலை திட்டங்கள் தமிழ்நாட்டில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
அண்ணா சாலை: அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பகுதியில் முக்கியமாக நந்தனம் சிக்னல் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த பாலத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன. அவை என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை. அண்ணாசாலை செல்ல இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இனி அந்த பாலத்தில் சென்றால் 5 சிக்னல்களில் நிற்க வேண்டியது இல்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் 5 நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடம் ஆகும். பீக் நேரங்களில் இதை விட கூடுதலாக இருக்கும்.
தி நகர் செல்பவர்கள் கீழே சென்று விடுவதால் பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் இருக்காது. சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும்.
சென்னை - பெங்களூர் சாலை: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும்.
இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம். இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரவாயல் பாலம்: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2010ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது.
2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.
சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4-ஐயும் கைப்பற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications