சென்னையில் இடிக்கப்படும் முக்கிய பஸ் ஸ்டாண்ட்! புது பிராட்வே பஸ் ஸ்டாண்ட் இதுதான்? ஆ பிரம்மாண்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

Broadway Bus Terminus Proposed renders for the redevelopment of Bus Terminal by CMRL

இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. மாநிலங்களவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு ரூ.200 கோடியை மாநில அரசு வழங்கும் என்றார். மற்ற தொகை தனியார் உதவி, வங்கிகள் உதவியுடன் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம்: சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 4 மாடல்கள் இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வாகும்.

Broadway Bus Terminus Proposed renders for the redevelopment of Bus Terminal by CMRL

இது போக அண்ணாநகர் (மேற்கு), கலைஞர் கருணாநிதி (கே.கே.) நகர் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் சென்னை மெட்ரோ மூலம் மேற்கொள்ளப்படும்.

மெட்ரோ: இது போக சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் .

Broadway Bus Terminus Proposed renders for the redevelopment of Bus Terminal by CMRL

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Broadway Bus Terminus Proposed renders for the redevelopment of Bus Terminal by CMRL

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+